48 நாள் நான் பட்ட வேதனை.. கணவரை பறிகொடுத்த சீரியல் நடிகை கண்ணீர் பேட்டி!

சென்னை: சன் தொலைக்காட்சியில் கிட்டதட்ட 1,360 எபிசோட்கள் ஒளிபரப்பான சீரியல் 'திருமதி செல்வம்'. இந்த சீரியலில் சஞ்சய், அபிதா, கே.ஆர்.வத்சலா, தீபக், வடிவுக்கரசி, பிரியா, சிலோன் மனோகர்,உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எஸ்.குமரன் இயக்கிய இந்த சீரியல் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்றாகும். இந்த சீரியலில் படு பயங்கரமான வில்லியாக நடித்து அனைவரின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கௌதமி வேம்புநாதன், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் அதே பெயரில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நடிகை கௌதமி வேம்நாதனின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு அவர் மன வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு ஒரு படப்பிடிப்புக்காக கிளம்பி கொண்டு இருக்கும்போது தான் என்னுடைய கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அவர் சாஸ்திரிகளாக இருப்பதால் அன்று ஒரு கல்யாணத்திற்காக அவர் கிளம்பி கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு மாரடைப்பு வந்தது. திருமணத்தை முடித்துவிட்டு நான் மருத்துவமனைக்கு வருகிறேன் என சொன்னார். ஆனால் அவருடைய நிலைமை அன்று மிகவும் மோசமாக இருந்ததால், முதலில் மருத்துவமனைக்கு போங்க என்று என் மருமகளுடன் அனுப்பி வைத்தேன்.

\

gowthami vembunathan serial interview
Photo Credit:

நடிகை வேதனை: நான் சரியான நேரத்திற்கு மண்டபத்திற்கு சென்று அந்தப் பெண்ணின் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். நீங்கள் இப்போது மருத்துவமனைக்கு செல்லுங்கள் என சொல்லிவிட்டு பெண் வீட்டாரிடம் எங்களுடைய நிலைமையை எடுத்து சொல்லி, அதே நேரம் திருமணத்தில் எந்த விதமான தடங்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒரு புரோகிதரை குறித்த நேரத்திற்கு அந்த இடத்திற்கு அனுப்பி நல்லபடியாக திருமணத்தையும் நடத்த சொன்னோம்.

48 நான் ஐசியூ: மருத்துவமனையில் அவருக்கு, சிகிச்சையை தொடங்கி விட்டார்கள் கண் திறந்து பார்த்த அவர், திருமணம் நல்லபடியாக நடந்ததா என்று தான் முதலில் கேட்டார். கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. எனக்கு இப்போது முக்கியமான ஷீட்டிங் இருக்கிறது. அதை முடிந்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன் நான் மாலை வருவதற்குள் அவருக்கு ஆப்ரேஷன் நல்லபடியாக நடந்தது. அவர், கிட்டத்தட்ட 48 நாட்கள் ஐசியூவில் இருந்தார். நான் மருத்துவமனையில் இருந்து தான் தினமும் படப்பிடிப்புக்கு சென்றேன். என் அம்மா, என் மகன்கள் அனைவரும் பண உதவி செய்தனர், அவரை மீட்டுக்கொண்டுவர அனைவரும் ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால், கடந்த ஆண்டு அது முடியாமல் போய்விட்டது என கண்ணீர் மல்க பேசி இருந்தார் நடிகை கௌதமி வேம்புநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X