படப்பிடிப்பில் விபத்து.. அன்னைக்கு மட்டும் ராம்கி இல்லனா?.. பாண்டியன் ஸ்டோர்ஸ்2 கோமதியின் காதல் கதை!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியாக நடித்து வரும் நடிகை நிரோஷா. யூடியூப் சேனலுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ராம்கி மீது எப்போது காதல் வந்தது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை நிரோஷா: அதில், நடிகை நிரோஷா நான் சினிமாவிற்கு வருவேன் என்று யாரும் நினைக்கவே இல்லை. நான் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்பதில் அண்ணன் உயதியாக இருந்தார். ஆனால், மணிரத்தினம் சார் வீட்டிற்கு வந்து அனைவரிடம் பேசினார். அப்போது, என் அக்கா நடிக்கட்டும் படம் ஓடுனா தொடர்ந்து நடிக்கட்டும் இல்லைனா பாத்துக்கலாம் என்று சொன்னார். அதன் பிறகு தான் நான் 'அக்கினி நட்சத்திரம்' படத்தில் நடித்தேன். நான் படப்பிடிப்பிற்கு சென்றால் அம்மா அல்லது அண்ணன் யாராவது என்னுடன் வருவார்கள்.

அக்கா ஒத்துக்கல: நானும் ராம்கியும் தான் அதிகமான திரைப்படங்களில் சேர்ந்து ஜோடியாக நடித்திருக்கிறோம். இருவரும் சேர்ந்து நடித்தால் அந்த படம் ஹிட்டு என்று சொல்கிற அளவிற்கு எங்களுடைய படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெற்றனர். 'இணைந்த கைகள்' படத்தில் கூட நான் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டியது, பூஜை போட்டதுமே, அக்கா வேண்டாம், அந்த படத்தில் நீ நடிக்கக்கூடாது என சொல்லிவிட்டார். அதன் பிறகு அருண்பாண்டியனுக்கு ஜோடியாக மாற்றிய பிறகு தான் அந்த படத்தில் நடிக்க அக்கா ஓகே சொன்னார்.
பெரிய விபத்து: ராம்கியும் நானும் படப்பிடிப்பில் பார்த்து கூட பேச மாட்டோம், ஆனால் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கும் என்னை பிடிக்கும் என்பது செந்தூரபூவே படப்பிடிப்பின் பொது தான் தெரிந்தது. அந்த படத்தில் வாட்டர் பால்ஸ் காட்சியில் நடித்துக்கொண்டு இருந்த போது, நான் விபத்தில் சிக்கினேன், அந்த விபத்தில் இருந்து நான் மீண்டு வந்ததே கடவுளின் செயல் தான். அடுத்த சில நாட்களிலேயே ரயில் காட்சி படப்பிடிப்பின் போது, ரயிலுக்கு இடியில் சிக்கிக்கொண்டேன். அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியது அவர்தான். அப்போது என் கையைப் பிடித்து நான் இருக்கிறேன், கவலைப்படாதே என்று சொன்னார். அந்த நேரத்தில் தான் அவர் மனதிலும் நான் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொண்டேன்.
காதல் வந்தது: அதன் பிறகு அவரிடம் ஃபோனில் பேசி வீட்டில் செம அடி வாங்கினேன். எங்க வீட்டில் ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்தார்கள், சினிமா துறையில் இருக்கும் யாரையும் காதலிக்கக் கூடாது என அடிக்கடி சொல்வார்கள். நடித்துவிட்டு வெளியில் நல்ல இடத்தில் எனக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால், நான் பிடிவாதமாக இருந்து ராம்கியை திருமணம் செய்து கொண்டேன் என நிரோஷா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











