விடிய விடிய டார்ச்சர்.. வீடு முழுக்க காண்டம்.. சீரியல் நடிகையின் அடுத்த உருட்டு!

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ரிஹானா பேகம் மீது தொழிலதிபர் ராஜ் கண்ணன் பூந்தமல்லி காவல் நிலையத்தில் திருமண மோசடி புகார் அளித்துள்ளார். மேலும், தன்னை ஏமாற்றி 20 லட்சத்தை ஏமாற்றிவிட்டதாக தொழிலதிபர் கூறியிருந்த நிலையில், ரிஹானா காவல் நிலையத்திற்கு செல்லாமல் ஒரு ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,தொழிலதிபர் ராஜ் கண்ணன் தான் எனக்கு 18 லட்சம் ரூபாய் பணத்தை தர வேண்டும் என்றார். இது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், ரிஹானா Arrowroots Tamil யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

இந்த பேட்டியில், முக்கியமான விஷயத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் ராஜ் கண்ணன் என்னுடைய கணவர் கிடையாது. என்னுடைய குழந்தைகளுக்கு யார் தந்தையோ அவர் தான் என்னுடைய கணவர். எனக்கு ஒரே, ஒரு முறைதான் திருமணம் நடந்தது. அந்த திருமணமும் தலாக்கில் முடிந்து விட்டது. ராஜ் கண்ணன் சர்ப்ரைஸ் என்று சொல்லி கண்ணை மூட சொல்லி, என் கழுத்தில் தாலியை போட்டார். எதிரில் இருக்கும் நண்பர் சிரித்துக் கொண்டே கண்ணை திறந்து பாருங்கள் என்று சொன்னதால், சிரிந்து கொண்டே கண்ணை திறந்தேன். அப்போது தான், அவன் என் கழுத்தில் இந்துக்கள் அணியும் தாலியை போட்டார். அந்த நேரத்தில் என்னால், எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க முடியவில்லை, ஏன் என்றால், அவன் எவ்வளவு மோசமானவன் என்பது எனக்குத் தெரியும் அது தான் நான் அமைதியாக இருக்க காரணம்.

Reehana Begum Interview Raj Kannan

விடிய விடிய டார்ச்சர்: என் கழுத்தில் தாலி கட்டிய அன்றை, என்னை தினமும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்து விட்டான். நமக்கு தான் கல்யாணம் ஆகிவிட்டதே, வா... வா என கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். நான் மறுத்தால் மிரட்டுவான், தினமும் விடிய விடிய எனக்கு டார்ச்சர் கொடுத்துக் கொண்டே இருந்தான். எனக்கும் வேறு வழி தெரியாததால், கடைசியில் நான் அவன் வீட்டிற்கு போனேன். அன்று மட்டும் நான் அந்த தாலி கழட்டி வீசி இருந்தால். நிச்சயம் என்னை கொன்று இருப்பான். அன்று நான் அமைதியாக இருந்ததால் தான் இன்று உயிரோடாவது இருக்கிறேன்.

சரக்கு,பெண்கள்: அவனுடைய வீட்டில், எப்பொழுதுமே சரக்கு, காண்டம், பெண்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். யார் என்று கேட்டால், ஊரில் இருந்து வந்து இருக்கிறார்கள் இரண்டு நாளில் போய்விடுவார்கள் என்று சொல்லுவான். அவன் வேறுவிதமான தொழில் செய்து பிழைக்கும் ஒரு பிச்சைக்காரன். நான் அவனிடம் பணத்தை வாங்க வில்லை. அவன் தான் என்னிடமே எப்பொழுதும் பணம் கேட்பான். அவனுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி இருக்கிறேன். சோத்துக்கு கூட அவனிடம் காசு இல்லை. அவன் பெரிய தொழிலதிபர் இல்லை. இப்போது கூட அவன் கழுத்தில் போட்டிருக்கும் செயின், வீட்டில் இருக்கும் ஒரு பெண் வாங்கி கொடுத்தது தான். அவன் வைத்து இருக்கும் 'ஆடி கார்' கூட அவனுடைய பெயரில் இல்லை. மொத்தத்தில் அவன் ஒரு மோசமான நபர், அது தெரியாமல் நான் தான் தானாக போய் மாட்டிக்கொண்டேன் என ரிஹானா பேகம் அந்த பேட்டியில் புலம்பி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X