கோட், இந்தியன் 2 என மாஸ் காட்டும் பாண்டியராஜன் மகன்.. ”வெறித்தனம்”னு பாராட்டிய விஜய்!
சென்னை: புலி, வலிமை, விக்ரம், மாஸ்டர், வாரிசு என பல பெரிய படங்களுக்கு டிரோன் கேமராமேனாக பணியாற்றியுள்ள பிரேமராஜன் அடுத்ததாக கோட் மற்றும் இந்தியன் 2 படங்களிலும் டிரோன் கேமராமேனாக பணியாற்றியுள்ளார். சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கோட் மற்றும் இந்தியன் 2 படங்களில் வேலை செய்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் பாண்டியராஜன் படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. பாக்கியராஜின் உதவி இயக்குநரான பாண்டியராஜன் அந்த 7 நாட்கள் படத்தில் நடிக்க ஆரம்பித்து பல படங்களில் நடித்துள்ளார். தனியாக கன்னிராசி படத்தை இயக்க ஆரம்பித்த பாண்டியராஜன் ஆண் பாவம் படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமானார்.

பாண்டியராஜனின் மகனான பிரேமராஜன் சினிமாவில் நடிகராக ஆகாமல் டெக்னீஷியனாக மாறியுள்ளார். சிறு வயதில் இருந்தே கேமரா மீது ஆர்வம் ஏற்பட்ட நிலையில், டிரோன் கேமரா ஆப்பரேட்டராக தற்போது பல படங்களுக்கு பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.
பாண்டியராஜன் குடும்பம்: நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் 1986ம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

1987ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு பல்லவராஜன் என பெயர் சூட்டினார். 1989ம் ஆண்டு பிறந்த மகனுக்கு பிருத்விராஜன் என பெயர் சூட்டினார். இந்த ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வனின் தம்பியாக அவர் நடித்திருப்பார். 1993ல் பிறந்த மூன்றாவது மகனான பிரேமராஜன் டிரோன் கேமரா ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்தியன் 2வில் பணியாற்றிய அனுபவம்: ஷங்கர் சார் இயக்கத்தில் கமல் சார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதே எனக்கு பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் எடுத்த ஷாட்டை பார்த்து விட்டு ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் "டெலிபோன் மணிபோல் சிரிப்பவளா" பாட்டில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட ஷாட் போல இருப்பதாக கூறியதும் சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை என்றார். விக்ரம் படத்திலும் கமல் மற்றும் பகத் ஃபாசில் சுவற்றில் நிற்கும் இடைவேளை காட்சியை படமாக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது என்றார்.

கோட்ல அந்த சீன் தெறிக்கும்: கேரளா மற்றும் ரஷ்யாவில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பணியாற்றி உள்ளேன். ரஷ்யாவில் வெளி இடங்களில் மற்ற நாட்டை சேர்ந்த டெக்னீஷியன்கள் பணியாற்ற அனுமதியில்லை. பிரைவேட்டான ஏரியாவில் அந்த காட்சிகளை படமாக்கினோம். தளபதி பார்த்துட்டு வெறித்தனம்னு மெசேஜ் போட்டாரு அது போதும். அந்த சீன் பத்தி ரிவீல் பண்ண முடியாது. அந்த போர்ஷன் வந்தா நிச்சயம் தியேட்டர் தெறிக்கும் என பாண்டியராஜனின் மகன் பிரேமராஜன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











