இது நம்ம ஆளு படத்தில் சிம்புவுடன் நயன்தாரா நடிக்க அவர் தான் காரணம்.. மனம் திறந்த பாண்டிராஜ்!

சென்னை: நடிகர் சிம்ப்வும் நடிகை நயன்தாராவும் வல்லவன்ன் படத்தில் இணைந்து நடித்த போது காதல் வலையில் விழுந்தனர். நயன்தாராவுடன் அந்த படத்தில் சிம்பு ரொம்பவே நெருக்கமாக நடித்திருப்பார். அதிலும் அந்த பெட்ரூம் ஷாட், வல்லவா எனை வெல்லவா பாடல்களில் எல்லாம் சொல்லவே வேண்டாம். ஆனால், அதன் பின்னர் நயன்தாராவுக்கு சிம்பு லிப் லாக் கொடுக்கும் பிரைவேட் போட்டோக்கள் சோஷியல் மீடியாக்களில் லீக்காகி இருவரும் காதலித்து வருவது அம்பலமானது.

நடிகர் சிம்பு நயன்தாராவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார் என்றெல்லாம் தகவல் பரவி வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதன் பின்னர் பல ஆண்டுகள் இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை.

Pandiraj reveals how Nayanthara enters into Idhu Namma Aalu movie and who is the reason behind

2006ம் ஆண்டு வல்லவன் படம் வெளியான நிலையில், 10 வருட சேலஞ்ச் போல மீண்டும் இருவரையும் ஒன்று சேர்த்து இயக்குநர் பாண்டிராஜ் தான் இது நம்ம ஆளு படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் 2016ம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், பேட்டி ஒன்றில், சிம்பு மற்றும் நயன்தாராவை மீண்டும் ஒன்றாக எப்படி நடிக்க வைத்தீர்கள் என்கிற கேள்விக்கு பாண்டிராஜ் பதில் அளித்துள்ளார்.

தாறுமாறாக ஓடும் தலைவன் தலைவி: இந்தியளவில் 52 கோடி வசூலும் உலகளவில் 70 கோடி வசூலையும் தாண்டி தாறுமாறாக தலைவன் தலைவி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி இணைவார் என்றும் பேச்சுவார்த்தைகள் சினிமா வட்டாரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் சிம்பு - நயன்தாராவை வைத்து படம் பண்ண அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பாண்டிராஜ்.

நஸ்ரியா தான் என் சாய்ஸ்: சிம்புவுக்கு ஜோடியாக இது நம்ம ஆளு படத்தில் நஸ்ரியாவை தான் முதலில் நடிக்க வைக்க நினைத்தேன். ராஜா ராணி படம் வந்து நல்லா போயிட்டு இருந்துச்சு, நஸ்ரியாவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சுமார் 20 நாட்கள் ஹீரோயினை ஃபிக்ஸ் செய்யாமலே சிம்புவை மட்டும் வைத்து போன் பேசும் காட்சிகளை எடுத்தேன். அந்த சைடுல யாரு நடிக்கப் போறாங்கன்னு தெரியாமலே அவர் நடித்தார்.

நயன்தாரா உள்ளே வந்தது எப்படி?: திடீரென ஒரு நாள் இந்த படத்தில் சிம்பு - நயன்தாரா சேர்ந்து நடித்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. எஸ்டிஆர் பிரதரிடம் நயன் நடித்தால் உங்களுக்கு ஓகேவா என்றார். அவங்க நடிக்க ஓகே சொன்னால், எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை என்றார். நம்ம படத்துக்கு பாலசுப்ரமணியம் தான் கேமராமேன், அவர் தான் இது கதிர்வேலன் காதல் படத்துக்கும் கேமராமேன், நயன்தாராவிடம் அவர் தான் பேசினார். சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கதை பிடித்திருந்தால் பண்றேன்னு சொல்லிவிட்டார். நான் நயனிடம் போனில் கதை சொல்லும் போதே, அவர் சிரித்து சிரித்து கேட்டார். அதன் பின்னர், ஷூட்டிங் சென்று அந்த படத்தை ஒருவழியாக முடித்து விட்டோம் என்று பதில் அளித்துள்ளார்.

ரசிகர்களுக்கு ஷாக்: பிரேக்கப் ஆன ஜோடியை மீண்டும் பாண்டிராஜ் எப்படி நடிக்க வைத்தார் என்பதே அப்போது ரசிகர்களுக்கு ரொம்பவே ஷாக்கிங்காக இருந்தது. மேலும், படத்தில் சூரியை வைத்து சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் செய்யும் விஷயங்களை எல்லாம் வசனமாக போட்டு கிளைமேக்ஸில் கூட ஒரு வழியா இவங்கள வச்சு படம் பண்ணிட்டோம் என முடித்தது எல்லாம் அல்டிமேட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X