Parasakthi: விஜய் ரசிகர்களை ரவுடிகள் என்று விமர்சித்த சுதா கொங்கரா.. புது பஞ்சாயத்து ஸ்டார்ட்!
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள படமான பராசக்தி படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டு உள்ளது. படம் சுமார் கிட்டத்தட்ட 150 கோடிகள் செலவில் உருவாக்கப்பட்ட படம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது 13 ஆம் தேதியுடன் நான்கு நாட்கள் ஆகிறது. பராசக்தி சிறந்த படமாக உருவாகி இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் முதல் இரண்டு நாட்களைத் தவிர பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் வசூல் இன்னும் குவிக்கவில்லை. இந்நிலையில் சுதா கொங்கரா கொடுத்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சுதா கொங்கரா அதில் மறைமுகமாக விஜய் ரசிகர்களை அட்டாக் செய்துள்ளார். அதாவது, " படத்தை அது அடைய வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன் ஒரு குழுவாக பெரிய வேலை செய்ய வேண்டி உள்ளது. இந்த மார்க்கெட்டிங் யுகத்தில் படக்குழுவாக அதைச் செய்ய வேண்டும். ஒரு படத்தை ரிலீஸ் செய்வது மட்டும் போதுமானதாக இருக்காது. பொங்கல் வார இறுதியில் படம் பெரும்பான்மையான ரசிகர்களைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

போராட்டம்: படத்திற்கு எதிராக தவறான விமர்சனங்கள் பரப்படுகிறது, இன்னும் சொல்லப்போனால் மோசமான வகையான அவதூறு, போலியான இணையதள ஐடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இப்படியான விமர்சனங்களைச் செய்கிறார்கள். படக்குழுவாக நாங்கள் இதையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அது எங்கிருந்து வருகிறது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் - அது எங்கிருந்து வருகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இப்படியனா அவதூறுகள், படம் ரிலீஸ் ஆகாத நடிகரின் ரசிகர்களிடத்தில் இருந்து வருகிறது" என்று கூறினார்.
விஜய் ரசிகர்களின் ரவுடித்தனம்: மேலும், அந்த பேட்டியில் அவர் ஒரு சமூகவலைதளப் பதிவை படித்தும் காட்டினார். அதாவது, " CBFC கிட்ட சான்றிதழ் வாங்குவது பெருசு இல்ல.. அண்ணா ரசிகர்கள் கிட்ட சாரி கேட்டு, மன்னிப்புச் சான்றிதழ் வாங்கு... இன்னும் 1 வாரம் இருக்கு, அவங்க மன்னிச்சு விட்ட பராசக்தி ஓடும்" என்று படித்துக் காட்டினார். இதைத் தொடர்ந்து அவர், இப்படியான பதிவுகள் படம் வெளியாகாத நடிகரின் ரசிகர்களிடமிருந்து வருகிறது, அவரின் ரசிகர்கள் தான் இதைச் செய்கிறார்கள். இதுதான் நாங்கள் எதிர்த்து போராடும் ரவுடித்தனம் மற்றும் குண்டர்த்தனம்" என்று தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்களை ரவுடிகள் என்றும் குண்டர்கள் என்றும் சுதா கொங்கரா விமர்சித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











