பரட்டை ரெடி
பல சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் வென்று ரிலீசுக்கு தயாராக விட்டது பரட்டை என்கிற அழகு சுந்தரம்.
கன்னட படமான ஜோகியின் தமிழ் ரீமேக்கான பரட்டை என்கிற அழகு சுந்தரத்தில் தனுஷ், அர்ச்சனா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.படம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசுகையில், இந்த படத்தை விரைந்து முடிக்க உதவிய நடிகர்,நடிகைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 26ம் தேதி இப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்துக் கொண்டிருக்கிறோம்.
படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு மிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்றார்.
தனுஷ் சம்பள பணம் முழுவதும் கொடுத்தால் மட்டும் டப்பிங் பேசுவேன் என பிரச்சனை செய்தாரே.. பிரச்சனை சால்வ் ஆயிருச்சா என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் முயற்சியால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டு விட்டன என்றார் கிருஷ்ணா.
More from Filmibeat
archana அர்ச்சனா தனுஷ் படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம் மீரா ஜாஸ்மீன் dhanush meera jasmine release suresh krishna


Click it and Unblock the Notifications











