சிங்கிள் ஷாட்.. சோலோ ஆக்டிங்.. அடுத்த சம்பவத்துக்கு தயாரான பார்த்திபன்.. அசத்துறாரே!

சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பார்த்திபன். இவர் முக்கியமானவர் மட்டும் இல்லாமல் வித்தியாசமானவர். தனது படங்களில் எப்போதும் வித்தியாசமானவற்றை தொடர்ந்து முயற்சி செய்து அவற்றில் வெற்றியும் காணபவரான பார்த்திபன் ஒரு பேட்டியில் சிரித்துக்கொண்டே, "எனக்கு மூணு ரோஜாக்கள் பக்கத்துல இருக்காங்க, நான் ரொம்ப லக்கி" என்று கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த பேட்டியில், “ஆரம்பத்தில், கேமராவுக்கு முன்னாடி எது இருந்தாலும் அது ஷோ தான், சினிமாவா இருந்தாலும் சரி, டிவி ஷோவா இருந்தாலும் சரி, அதை பெஸ்ட்டா பண்ணனும்னு நினைக்கிறேன் என்றார். மேலும், பெண்கள் எப்போதும் வாசம் இருக்கும் இடத்தில்தான் இருப்பார்கள் அல்லது வாசம் எங்க இருக்கோ அங்க பூக்கள் இருக்கும் என்றும் நகைச்சுவையாக கூறினார்.

Parthiban Opens About His Single Shot And Solo Acting Movie Audienum Aavadiyappanum

சிங்கிள் பசங்க ஷோவில் கலந்து கொண்டது பற்றி கூறுகையில், இந்த ஷோவில் ஒரு ஆண் பெண்ணை எப்படி இம்ப்ரஸ் பண்றதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு நினைச்சேன். அதனால, கத்துக்கலாமேன்னு இந்த ஷோவில் கலந்துக்கிட்டேன் என்றார். மேலும், இது ஒரு சரியான நேரத்தில் கிடைத்த வாய்ப்பு என்றும் குறிப்பிட்டார். சினிமா மீது தனக்கு இருக்கும் காதல் பற்றி பேசிய பார்த்திபன், சினிமா மேல இருக்கிற காதல் சுருங்கி ஒரே இடத்துக்கு போயிட்டு இருக்கு. அதனால், இவங்க எல்லாம் அழகா இருந்தாங்கன்னா நல்லா இருக்கும், ஆடியன்ஸ் பார்த்து ரசிப்பாங்க என்றார்.

தேசிய விருது: தொடர்ந்து, சமீபத்தில் மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுகள் பற்றி கருத்து தெரிவித்த அவர், ஒவ்வொரு வருசமும் இந்த மாதிரி ஒரு பிரச்சனை வரும். இந்த தடவை எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைச்சது எனக்கு சந்தோஷம். ஊர்வசி மேடத்துக்கு விருது கிடைச்சது மகிழ்ச்சி, ஜி.வி.பிரகாஷுக்கு மறுபடியும் ஒரு விருது கிடைச்சிருக்கிறது மகிழ்ச்சி என்றார்.

சிங்கிள் ஷாட் சோலோ ஆக்டிங்: மேலும், தான் அடுத்து இயக்கவிருக்கும் படம் பற்றி பேசிய பார்த்திபன், "ஆடியன்ஸும் ஆவடியப்பனும்"னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். அது வந்து "ஒத்த செருப்பு" "இரவின் நிழல்" ரெண்டும் சேர்ந்த மாதிரி சிங்கிள் ஷாட் சோலோ ஆக்டிங் மூவி. கண்டிப்பா அந்த படம் விருதுக்கான படமாக இருக்கும் என்றார்.

அரசியல் எண்ட்ரி எப்போது?: இறுதியாக அரசியல் பற்றி பேசிய பார்த்திபன், விஜய் அரசியலுக்கு வந்ததுல இருந்து நான் அவரை அப்ரிஷியேட் பண்ணிட்டே இருப்பேன். ஆனால், நான் இன்னும் ரூபாய் 200 கோடி சம்பளம் வாங்கல. அதனால் நான் இன்னும் அரசியலுக்கு வரல. கமல் என்னுடைய நண்பர். அவருடைய எந்த சந்தோஷமும் எனக்கு சந்தோஷம்தான் என்று பேசினார். இவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X