அக்பரில் பார்வதி இல்லை!
| Click here for more images |
டோலிவுட்டின் அழகு ராணி, பார்வதி மெல்டன், அஜீத் நடிக்கும் அக்பர் படத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
பில்லாவுக்குப் பிறகு அஜீத் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள படம் அக்பர். டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகை தனது கவர்ச்சி அலையால் அசரடித்துக் கொண்டிருக்கும் பார்வதி மெல்டன் நடிக்கவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு கூறப்பட்டது.
முதலில் இந்த செய்தியை பார்வதி மறுக்கவில்லை. மேலும், இதைக் கேட்கவே சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது, தான் அக்பரில் இல்லை என்று கூறியுள்ளார் பார்வதி.
இதுகுறித்து அவர் கூறுகையில், அக்பர் படத்தில் நடிக்க கோரி என்னை யாரும் இதுவரை அணுகவில்லை. அஜீத்துடன் இணைந்து நடிக்க நான் ஆர்வமாகவே இருக்கிறேன். ஆனால் இந்த நிமிடம் வரை நான் அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன், ஆயத்தமாக உள்ளேன். அஜீத் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்தோஷப்படுவேன் என்றார் பார்வதி.
இப்போது தமிழில் ஸ்ரீகாந்த்துடன் பூ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பார்வதி.


Click it and Unblock the Notifications











