விஜய்யிடம் நான் பேசவே இல்லை.. எல்லாமே வதந்தி.. ஓபனாக போட்டுடைத்த பவன் கல்யாண்.. கொதிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனநாயகன் பட ஹீரோவும் தவெக தலைவருமான விஜய் இணையப் போகிறார் என பல முன்னணி ஊடகங்களிலேயே செய்திகள் பரவின. சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் கெத்தாக காரில் இருந்து போஸ் கொடுத்துக் கொண்டே தனக்கு பயமே இல்லை என ரசிகர்களுக்கும் மக்களுக்கும் உணர்த்தினார்.

விஜய் பாஜக - அதிமுக கூட்டணியில் சேர்ந்து விட்டார் என்றும் கொள்கை எதிரிகளுடன் கூட்டு வைத்துவிட்டார் என்றும் திமுக தரப்பு தான் வதந்திகளை கட்டவிழ்த்து விட்டதாக தவெக தொண்டர்கள் தற்போது பவன் கல்யாணின் பேட்டியை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Pawan Kalyan clears the air he never talked to Vijay for NDA Alliance

முன்னதாக ரங்கராஜ் பாண்டே எடப்பாடி பழனிசாமியுடன் கேட்டபோதும் அவரும் விஜய்யை எங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றார். பவன் கல்யாணும் அதே பதிலை தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

உஸ்தாத் பகத் சிங் ரிலீஸ்: துரந்தர் 2 படத்துக்குப் போட்டியாக டாக்ஸிக் வெளியாகாத நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடித்துள்ள உஸ்தாத் பகத் சிங் திரைப்படம் வரும் மார்ச் 19ம் தேதி வெளியாகிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் அளித்த லேட்டஸ்ட் பேட்டி தான் தற்போது செம டிரெண்டாகி வருகிறது.

மீடியாவை ஒதுக்கும் விஜய், த்ரிஷா: தொடர்ந்து விஜய்க்கு எதிரான கருத்துக்களை சில மீடியாக்கள் திட்டமிட்டு செய்வதாக தவெகவினர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். விஜய் மற்றும் சமீப காலமாக த்ரிஷாவும் மீடியாக்களை ஒட்டுமொத்தமாக தவிர்த்து வருகின்றனர். விஜய் NDA கூட்டணியில் துணை முதல்வர் பதவி டீலிங் உடன் சேர்ந்துவிட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், பவன் கல்யாணின் பேட்டி பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

விஜய்யிடம் பேசவே இல்லை: விஜய்க்கு நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் ஆலோசனை வழங்கினார் என்றும் NDA கூட்டணியில் சேர்ந்து இந்த தேர்தலை எதிர்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், விஜய்யிடம் தான் பேசவே இல்லை என்றும் ஏன் இதுபோன்ற வதந்திகள் வெளியாகிறது என்றே தெரியவில்லை என்றும் பவன் கல்யாண் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தனித்துப் போட்டி: விஜய்க்கு எதிராக பாஜக எந்தவொரு அழுத்தமும் தரவில்லை என்றும் பவன் கல்யாண் கூறியுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பின் போது விஜய் மீண்டும் தான் தனித்துப் போட்டியிடுவதை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஆதரவு விஜய்க்கு எந்தளவுக்கு இருக்கப் போகிறது என்பது வரும் மே 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X