நான் மோசமானவளாம்: அப்பா வயது நடிகருடன் கள்ளத்தொடர்பு வதந்தி குறித்து நடிகை விளக்கம்

By Siva

மும்பை:ஆமீர் கானுடன் தொடர்பு என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்.

சூப்பர் டூப்பர் ஹிட்டான தங்கல் படத்தில் ஆமீர் கானின் மகளாக நடித்து பிரபலமானவர் பாத்திமா சனா ஷேக். அதன் பிறகு அவர் மீண்டும் ஆமீர் கானுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்தார்.

இதற்கிடையே ஆமீர் கானுக்கும், பாத்திமாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக பாலிவுட்டில் பேச்சு கிளம்பியது.

பாத்திமா

பாத்திமா

எனக்கும், ஆமீர் கானுக்கும் இடையே தொடர்பு என்று வெளியான வதந்திகளை பார்த்து முன்பு மிகவும் கவலை அடைந்தேன். இதற்கு முன்பு இப்படிப்பட்ட பேச்சுகளில் நான் சிக்கியது இல்லை என்பதால் ரொம்பவே ஃபீல் பண்ணினேன் என்கிறார் பாத்திமா.

வருத்தம்

வருத்தம்

நான் இதுவரை பார்த்திராவர்கள் எல்லாம் என்னை பற்றி பேசுகிறார்கள். அதில் உண்மை இருக்கிறதா என்பதை கூட தெரிந்து கொள்ளாமல் பேசுகிறார்கள். மக்கள் நான் நல்லவள் இல்லை என்று நினைக்கிறார்கள். என்னிடம் கேளுங்கள் நான் உண்மையை சொல்கிறேன் என்று கூற வேண்டும் போல் உள்ளது என்று பாத்திமா தெரிவித்துள்ளார்.

மனைவி

மனைவி

என்னால் ஆமீர் கான் மற்றும் அவரின் மனைவி கிரண் ராவ் இடையே பிரச்சனை என்று வெளியான தகவல்களை பார்த்து எனக்கு வருத்தமாக உள்ளது. ஏனென்றால் மக்கள் தாங்களாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். நான் கெட்டவளாக இருந்து அவர்கள் அப்படி நினைத்தால் பரவாயில்லை. ஆனால் நான் அப்படி இல்லாமலே அவர்கள் என்னை கெட்டவளாக நினைப்பதை நான் விரும்பவில்லை என்று பாத்திமா கூறியுள்ளார்.

சினிமா

சினிமா

படங்களில் நடிக்க வந்துவிட்டால் வதந்திகள் கிளம்பத் தான் செய்யும் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் தற்போது வதந்திகளை கண்டு கொள்வது இல்லை. ஆனாலும் சில நாட்கள் வதந்திகள் என்னை பாதிக்கத் தான் செய்கிறது என்று ஃபீல் பண்ணுகிறார் பாத்திமா சனா ஷேக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X