அவமானத்தால்..சாக கூட நினைத்தேன்.. பேரழகன் சினேகாவின் கண்ணீர் கதை!
சென்னை: தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யாவின் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் பேரழகன்.
இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் சூர்யா பெண் பார்க்கும் காட்சியில் உயரம் கம்மியான பெண்ணாக சினேகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் கற்பகம்.

பேரழகன் சினேகா: சினிமாவை விட்டு விலகி விட்ட கற்பகம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனக்கு ரெண்டு அண்ணன், மூன்று அக்கா என குடும்பம் ரொம்ப பெரிசு. நான் தான் வீட்டில் கடைசி பெண்,எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போதே அம்மா இறந்துவிட்டதால் அக்கா வீட்டில் தான் வளர்ந்தேன். அங்கேயும் வறுமை இருந்ததால் சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டப்பட்டேன்.
அவமானமா இருக்கும்: தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தால் மட்டும் தான் டிரஸ் எடுத்து தருவார்கள், கிழிந்த துணியோடுதான் இருப்பேன், அதே போல ஸ்கூலுக்கு போகும் போது கெட்டுப்போன சாப்பாட்டை கட்டித்தருவார்கள். இதனால், ஸ்கூல்ல பசங்க எல்லாம் கேலி பண்ணி சிரிப்பாங்க, அதே போல பசங்க எல்லாம், என்னை கிண்டல் செய்து, பேக்கை சாக்கடையில் போட்டுவிடுவார்கள், இதனால், ஸ்கூலுக்கு போவதற்கே அவமான இருக்கும், சாகலாம் என்று கூட நினைத்து இருக்கிறேன். அதன்பிறகு ஸ்கூலுக்கு போவதை நிறுத்திவிட்டேன்.
அற்புத தீவு படத்தில் நடித்தேன்: அக்கா வீட்டில் இருந்து அக்காவிற்கு உதவியாக வேலை செய்து கொண்டு காலத்தை ஓட்டிவிட்டேன் அப்போது தான், ராஜா என்பவரை திருமணம் செய்தேன் அவர் அபூர்வசகோதரர்கள் படத்தில் நடித்து இருக்கிறார். திருமணமான ஓராண்டுக்குள் எனக்கு ஓர் மகள் பிறந்தது. அப்போது தான் மலையாளப்படமான அற்புதத் தீவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் என் கணவரும் அந்த படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தோம்.

அனைவரும் பாராட்டினார்கள்: இதையடுத்து ஜெயம் படத்தில் வண்டி வண்டி ரயிலு வண்டி பாட்டில் நடித்தேன். அதன் பிறகுதான், பேரழகன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, அந்த படத்தில் சினேகா என்ற கதாபாத்திரம் எனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது எங்கே பார்த்தாலும் எல்லாம் என்னை பாராட்டினார்கள். அந்த படத்தில் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், ஏஜெண்ட் எனக்கு பாதி சம்பளத்தைத் தான் கொடுத்தார்.
கண்ணீர் கதை: மேலும், என் கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவருக்கு நரம்பு தளர்ச்சி இருந்தது. இதனால், அவரால் நடிக்க முடியாமல் போனதால், வீடு பக்கத்திலேயே சின்ன துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தேன். திடீரென கணவர் இறந்துவிட்டார். அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன் அப்போது சூர்யா சார் தான் பணம் கொடுத்து உதவினார், மற்ற எந்த நடிகர்களுடம் எனக்கு உதவி செய்யவில்லை என்று பேரழகன் சினேகா தனது கண்ணீர் கதையை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











