அந்த மாதிரியான ஒரு பொண்ண பாத்தா.. காதல் வரணும்.. மிஸ்கின் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின். இவரின் இயக்கத்தில் பல திகிலூட்டும் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றன. இவரது இயக்கத்தில் சைக்கோ , பிசாசு போன்ற படங்கள் வெளியாகின. ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மிஷ்கின் காதல் குறித்து பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநராக இருந்த மிஷ்கின் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, விஜய்யின் லியோ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றார் மிஷ்கின். இன்னும் கொஞ்ச சீன்களில் அவரை காட்டியிருக்கலாமோ என்ற ஆர்வத்தையும் லியோ படத்தில் வரவழைத்தார் மிஷ்கின்.

பிசாசு 2: இயக்குநர் மிஷ்கின் தற்போது, பிசாசு 2 இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இதில், ஆண்ட்ரியாவுடன் ராஜ்குமார் பிச்சுமணி, நமிதா கிருஷ்ணமூர்த்தி, ஷாம்னா காசிம், விஜய் சேதுபதி, அஜ்மல் அமீர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் அனைத்துப்பணிகளும் விரைவடைந்த நிலையில், பிசாசு 2 படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
பட்டமரம்: இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் காதல் குறித்து அளித்துள்ள பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு அழகான பெண்ணைப்பார்த்து ஒரு ஆணுக்கு காதல் வரவில்லை என்றால் பட்டமரம் என்று அர்த்தம். அதே போல ஒரு அழகான ஆண்மையான ஒரு ஆணை பார்க்கும் போது, காதல் வயப்படவில்லை என்றால் அவன் ஒரு பட்டுப்போன மரம். ஆனால், அந்த சமூகம் பட்டுப்போவதையே தொழிலாக வைத்து இருக்கிறது. குழந்தைகளை பட்டுப்போக வைத்துவிடுகிறது.
என் மனம் ஏற்கவில்லை: என் மகள் பிடிக்காத ஒரு மனிதரோடு, உடல் நாற்றம் அடிக்கும் மனிதரோடு, வாய் நாற்றம் அடிக்கும் மனிதரோடு ஐம்பது வருடம் வாழ்வதை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை. காமத்தால் குழந்தைகள் பிறந்துவிட்டாலும், அந்த குழந்தையை நாம் ஆத்மார்த்தமாக நினைத்து வளர்க்கிறோம். அந்த குழந்தைகளின் மகிழ்ச்சி ஒழுக்கமான சந்தோஷம் அதை நாம் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்,. அந்த சந்தோஷத்தை நாம் அவர்களுக்கு கொடுக்கவில்லை என்றால், எதற்கு மலர்கள் பிறக்கின்றன என்று தான் நினைக்க தோன்றுகிறது. மயில்தோகை ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது, குழந்தையின் சிரிப்பில் ஏன் இத்தனை அழகு இருக்கும் போது, நம் குழந்தைகள் அழகைத் தேடி செல்லும் போது மறுப்பதை என் மனம் இடம் தரவில்லை என்று மிஸ்கின் காதல் குறித்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











