twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போட்டுத் தாக்கு, கருப்பான கையால பாட்டெல்லாம் மறக்க முடியுமா.. பாடகி ரோஷினியின் செம குத்து பேட்டி!

    |

    சென்னை: பிரபல பின்னணி பாடகி ரோஷினியின் செம சூப்பரான குத்து பேட்டி நம்ம தமிழ் பிலிமி பீட்டில் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    ILAYARAJA SIR STUDIO தான் எங்களுக்கு கோவில் | SINGER ROSHINI CHAT PART-01 | FILMIBEAT TAMIL

    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் ஏகப்பட்ட பாடல்களை மேடைகளில் பாடியுள்ள ரோஷினி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், உடல்நிலை விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று நிகழ்ச்சியிலேயே பிரார்த்தனை செய்துள்ளார்.

    தெலுங்கில் தமன் இசையில் வெளியான வீரா படத்தின் ஹோசனம் பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், தமிழில் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சிம்புவின் குத்து படத்தின் போட்டுத் தாக்கு பாடல் மூலம் அறிமுகமானார்.

    Playback singer Roshini’s musical interview!

    தமிழ் சினிமாவில் குத்து பாட்டு பாட வேண்டும் என்றாலே, நம்ம ரோஷினியை கூப்பிடுங்க என்று சொல்வது போல ஏகப்பட்ட சூப்பர் ஹிட் குத்துப் பாடல்களை பாடி உள்ளார்.

    பட்டியல் படத்தில் வரும் நம்ம காட்டுல மழை பெய்யுது, தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் வரும் என் ஜன்னல் வந்த காற்று, விஷாலின் தாமிரபரணி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான கருப்பான கையாள என்ன புடிச்சா உள்ளிட்ட ஏகப்பட்ட ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

    நம்ம தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டியளித்த இவர், பேட்டி நிகழ்ச்சியை இசை நிகழ்ச்சியாகவே மாற்றி ஏகப்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

    மேலும், இளையராஜாவின் ஸ்டூடியோ தன்னை போன்ற பின்னணி பாடகர்களுக்கு எல்லாம் கோயில் போல என்றும், பய பக்தியுடன் தான் அங்கே செல்வோம் போன்ற ஏகப்பட்ட தகவல்களை சுவாரஸ்யமாக பேசியுள்ள அவரது பேட்டியை கண்டு மகிழுங்கள்!

    English summary
    Popular playback singer Roshini gave us a special musical interview. Pottu thakku singer shared several musical incidents and talks about SPB and Ilayaraja too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X