நிர்வாணத்தை எப்படி பார்க்கிறேன்.. ’பிளேபாய்’ புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் அசத்தல் பேட்டி!
சென்னை: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிராமத்தில் பிறந்த எல். ராமச்சந்திரன் அமெரிக்காவின் பிரபல நிர்வாண லைஃப்ஸ்டைல் மேகஸின் ஆன பிளேபாய் மாத இதழ் வரைக்கும் புகைப்படக் கலைஞராக பணியாற்றி உள்ளார்.
Recommended Video
நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக அவர் அளித்துள்ள பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த லாக்டவுனில் விஜய்சேதுபதியின் சமீபத்திய போட்டோஷூட்டையும் நடத்தியவர் இவர் தான்.
யாஷிகா ஆனந்த், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட நடிகைகளின் புகைப்படங்கள் சமீபத்தில் இந்திய அளவில் டிரெண்டாகவும் இவரது லென்ஸ் வண்ணம் தான் காரணம்.
பெண்களை நிர்வாணமாக போட்டோ பிடிப்பது குறித்த கேள்விக்கு, கொஞ்சமும் விரசம் இல்லாமல், இவர் சொல்லும் அழகான பதில்களை வீடியோவில் கண்டு ரசியுங்கள்.
2019ம் ஆண்டு 4 மணி நேரத்தில் அதிகப்படியான முகங்களை வரைந்ததற்காக கின்னஸ் விருதும் பெற்றவர் இவர்.
மற்ற போட்டோகிராஃபர்களை போலவே சாதாரணமாக தனது வாழ்க்கை தொடங்கியதாகவும், ஒரு கட்டத்தில் புதிதாக என்ன பண்ணலாம்? என்ற கேள்விக்கு பதிலாகவே மும்பையில் இருந்து ஒரு நிர்வாண மாடலை வரவழைத்து முதன் முதலாக தயங்கி தயங்கி தான் எடுத்த முதல் நிர்வாண போட்டோஷூட் அனுபவத்தையும் அழகாக பகிர்ந்துள்ளார்.
இப்படியெல்லாம் போட்டோ எடுக்கிறீங்களே, உங்கள் மனைவி மற்றும் ஊர் காரங்க எதுவுமே பேசலையா என்ற கேள்விக்கு, திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வரை என் தொழிலை நான் கலையாகத் தான் பார்க்கிறேன் என்பதை என் மனைவி புரிந்து வைத்துள்ளார்.
மரம், செடி, கொடி எல்லாமே இந்த இயற்கையில் இருக்கும் அனைத்துமே நிர்வாணமாகத் தான் இருக்கின்றன. நாம் பார்க்கும் பார்வையில் தான் ஆபாசம் இருக்கிறது என பிரபல புகைப்படக் கலைஞர் எல். ராமசந்திரன் பேசும் பேட்டியை வீடியோவை க்ளிக் செய்து கண்டு ரசியுங்கள்!


Click it and Unblock the Notifications











