Bigg Boss 3 ஓவியாவே சொல்லியாச்சு: ஸ்க்ரிப்ட்டை மாத்துங்க பிக் பாஸ்

By Siva

சென்னை: ஓவியா தெரிவித்ததை பார்த்த பார்வையாளர்கள் ஸ்க்ரிப்ட்டை மாத்துங்க பிக் பாஸ் என்கிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனும் வந்துவிட்டது. ஆனால் முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியாவை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி இன்னும் மறக்கவில்லை.

Please change the script Bigg Boss

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் சிலர் ஓவியாவை போன்று நடந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சொன்ன நீங்க ஷட் அப் பண்ணுங்க என்கிற வார்த்தையை இந்த சீசனில் பயன்படுத்தியுள்ளனர்.

அதை பார்த்த ஓவியா ஆர்மிக்காரர்களோ(ஆம், ஓவியா ஆர்மி இன்னும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது) எங்க தலைவி போன்று நடந்து கொள்வதை நிறுத்துங்கள் என்கிறார்கள். இந்நிலையில் பேட்டி அளித்த ஓவியாவோ, தன்னை போன்று காப்பியடித்து நடந்தால் வெற்றி பெற முடியாது. அவரவர் அவரவராகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் என்ன தான் ரியாலிட்டி ஷோ என்றாலும் அது ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறது என்று நெட்டிசன்கள் நம்புகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சில போட்டியாளர்களும் இதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் ஓவியாவின் பேட்டியை பார்த்தவர்கள் அவரே சொல்லிவிட்டார் அதனால் ஸ்க்ரிப்ட்டை மாத்துங்க பிக் பாஸ். ஓவியாவை போன்று போட்டியாளர்களை நடிக்கச் சொல்ல வேண்டாம். அதை பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிக் பாஸ் வீட்டில் யாராவது பேசிக் கொண்டிருக்கும்போதே கோபமாக எழுந்து வெளியே செல்வது ஓவியா ஸ்டைல். அதை லாஸ்லியா, மீரா மிதுன் ஆகியோர் காப்பியடித்துள்ளனர்.(காப்பியடிக்க வைக்கப்பட்டுள்ளனர்). இன்று வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவில் சேரன் பேசிக் கொண்டிருக்கும்போதே மீரா மிதுன் அவரை அவமதிப்பது போன்று அந்த அறையில் இருந்து வெளியே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீராவுக்கு எல்லாம் பெரிய ஓவியான்னு நினைப்பா என்று பார்வையாளர்கள் வறுத்தெடுத்துள்ளனர். சில நெட்டிசன்களோ, ஓவியா திமிராக நடந்து கொண்டால் மட்டும் பாராட்டுவது ஆனால் பிற போட்டியாளர்கள் அப்படி செய்தால் திட்டுவது எந்த ஊர் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X