இது லாக்டவுன் தாடி இல்லை.. பொன்னியின் செல்வன் தாடி.. பிரபல நடிகர் செம ஜாலி பேட்டி!
சென்னை: சினிமா, சீரியல் என ஏகப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர் நடிகர் மோகன் ராமன்.
Recommended Video
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், நமது தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டி தற்போது வெளியாகி உள்ளது.
நீண்ட தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயுள்ளார் நடிகர் மோகன் ராமன்.

இதற்கு முன்னதாக இப்படியொரு தாடியை தான் வளர்த்ததே இல்லை எனக் கூறும் அவர், மிச்சர், பாப்கார்ன் எல்லாம் சாப்பிடும் போது, தாடியில் மாட்டிக்கிட்டு செம தொல்லைக் கொடுக்குது என தனது ஸ்டைலில் கலகலப்பாக பேசியுள்ளார்.
எவ்வளவு முயற்சி செய்தும் அவருடைய கதாபாத்திரம் பற்றியும், பொன்னியின் செல்வன் பற்றியும் எந்தவொரு தகவலையும் பெற முடியவில்லை.
நான் அக்ரிமெண்ட் போட்டு கொடுத்துட்டேன் பா.. எதையும் சொல்லக் கூடாது.. ஆளவிடுங்க பாஸ் என்கிற ரேஞ்சுக்கு பேசியுள்ளார்.
அப்படி இருந்தும் ஒரு சூப்பரான பொன்னியின் செல்வன் படத்தின் தகவலை உருவியாச்சு, அது என்ன வென்றால், இரண்டு பாகங்களாக வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தில், அமரர் கல்கி எழுதிய நாவலை போலவே ஆரம்பித்து, அதே போல பொன்னியின் செல்வன் திரைப்படம் முடியாது என்பது தெளிவாகி உள்ளது.
மணிரத்னத்தின் டச் மற்றும் விறு விறுப்பு காரணமாக, கதையில் ஏகப்பட்ட எடிட்கள் ட்விஸ்ட்டுகளுடன் உருவாக்கப்பட்டு வருவதை ஒரு வழியாக ஓப்பன் செய்து விட்டார்.
சியான் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடிக்கிறார், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாக நடிக்கிறார், கார்த்தி வந்தியத்தேவனாக நடிக்கிறார், ஐஸ்வர்யா ராஜ் நந்தினியாகவும் திரிஷா குந்தவையாகவும் நடிக்கிறார் என்கிற அனுமானங்கள் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வ தகவல் வந்தால் தான் எதையும் உறுதி செய்ய முடியும் என்கிறார் மோகன் ராமன்.
தனது கதாபாத்திரம் குறித்து அவர் எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றால் கூட நம்முடைய கெஸ்ஸிங் அவர் குடந்தை ஜோசியர் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றே அனுமானிக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் உண்மை தெரிந்து விடும்.
பொன்னியின் செல்வன் படத்திற்காக தாடியை வளர்த்த சுவாரஸ்ய அனுபவங்களை அவர் மொழியில் கூறும் பேட்டியை கண்டு மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











