»   »  பூஜா கோவில் டமார்!

பூஜா கோவில் டமார்!

Subscribe to Oneindia Tamil

நடிகை பூஜாவுக்கு இலங்கையில் கட்டப்பட்ட கோவில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

சிங்கள தாய்க்கும், இந்தியத் தந்தைக்கும் பிறந்தவர் பூஜா. பெங்களூரில் தங்கியிருந்து தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வருகிறார் பூஜா. சமீபத்தில் இலங்கை சென்று 2 சிங்களப் படங்களிலும் நடித்துள்ளார்.

அதில் அவர் நடித்த அஞ்சலிகா என்ற படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. இதனால் பூஜாவுக்கு இலங்கையிலும் ரசிகர் கூட்டம் உருவானது. ஒரு காலத்தில் தமிழில் பிரபலமாக இருந்த குஷ்புவுக்கு திருச்சி பக்கம் கோவில் கட்டி உலகத் தமிழர்களை கேவலப்படுத்தியது ஒரு ரசிகர் கும்பல்.

தமிழ் ரசிகர்களுக்கு நாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில், சிங்கள ரசிகர்களும் பூஜாவுக்கு இலங்கையில் கோவில் கட்டி அசத்தினர்.

கொழும்பு அருகே உள்ள நெகம்போ என்ற இடத்தில் பூஜாவுக்கு கோவில் கட்டப்பட்டது. இது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்தக் கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து விட்டனர்.

யார் குண்டு வைத்ததுத் தகர்த்தது என்று தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து பூஜாவிடம் கேட்டபோது. நான் முதலிலேயே வேண்டாம் என்றுதான் கூறினேன். ஆனால் உற்சாக மிகுதியால் கோவில் கட்டினர். இப்போது அதை குண்டு வைத்துத் தகர்த்து விட்டனராம்.

எனக்கு இதனால் அதிர்ச்சி ஏதும் இல்லை. முன்பு குஷ்புவுக்குக் கூட கோவில் கட்டினர். பின்னர் குஷ்புவுக்கு எதிராக சர்ச்சை கிளம்பியபோது அக்கோவில் இடிக்கப்பட்டது.

என்னை ரசிகர்கள் ரசிப்பதில், மதிப்பதில் தவறில்லை. ஆனால் கோவில் கட்டும் அளவுக்கு நான் பெரிய பெண் இல்லை. அது தவறான ஒரு விஷயம். நல்ல வேளை எனக்கு கட்டப்பட்ட கோவில் இப்போது இல்லை என்றார் பூஜா.

அடடா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil