விஸ்வரூபம் 2-க்காக நான் செய்ததை எந்த இந்திய நடிகையும் செய்யவில்லை: பூஜா குமார்

By Siva

Recommended Video

விஸ்வரூபம் 2-க்காக நான் செய்ததை எந்த இந்திய நடிகையும் செய்யவில்லை: பூஜா குமார்- வீடியோ

சென்னை: விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் செய்த காரியத்தை இந்திய நடிகைகள் யாருமே செய்தது இல்லை என்று பூஜா குமார் தெரிவித்துள்ளார்.

கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படம் வரும் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸாகிறது.

இந்நிலையில் படம் குறித்து பூஜா குமார் கூறியிருப்பதாவது,

தாமதம்

தாமதம்

எங்களின் கடின உழைப்பை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் தாமதமானதில் வருத்தமே இல்லை. படங்கள் எடுப்பது சவாலானது, அதை வெளியிடுவது அதைவிட சவாலானது. திரைத்துறையில் இது போன்ற தாமதம் எல்லாம் சாதாரணம். முதல் பாகத்தில் நிருபமா அதாவது என் கதாபாத்திரம் கணவரை வெறுப்பது போன்று இருந்தது.

தாய்நாடு

தாய்நாடு

தனது கணவர் தன் தாய்நாட்டை அதிகம் விரும்புகிறார் என்பதை புரிந்து கொண்ட நிருபமா அவருக்கு உதவ முடிவு செய்கிறார். கமல் சார் என் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நானே நடித்துள்ளேன். ஒரு காட்சியில் நானும், கமல் சாரும் நீருக்கு அடியில் வெடிகுண்டை செயல் இழக்கச் செய்ய வேண்டும், துப்பாக்கிச்சூட்டிலும் ஈடுபட வேண்டும். நீருக்கு அடியில் வேறு எந்த இந்திய நடிகையும் ஸ்டண்ட் செய்ததாக தெரியவில்லை.

மாற்றம்

மாற்றம்

நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் என்னை மாற்றிக் கொண்டிருக்கிறது. விஸ்வரூபத்தின் இரண்டு பாகங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அனுபவம் இன்னும் அப்படியே என் நினைவில் உள்ளது. முதல் பாகம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகியபோதிலும் நேற்று நடந்தது போன்று உள்ளது. ஒரு நடிகையாக நான் நிறைய வளர்ந்துள்ளேன். அதற்காக கமல் சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்

கமல்

கமல் ஒரு மேஜிக் மேன் போன்று. நான் தமிழ் படங்களில் நடிக்க விருப்பமாக உள்ளேன். ஆனால் நான் வெளிநாட்டில் வசிப்பதால் என்னை அணுக தயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். நல்ல படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். கடந்த ஆண்டு நான் பிஎஸ்வி கருடா வேகா என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார் பூஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X