twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யார் இந்த சந்திரா தங்கராஜ் ? கள்ளனுக்கும் கள்ளருக்கும் என்ன சம்பந்தம் ...சிறப்பு பேட்டி

    |

    சென்னை : தமிழ் இலக்கிய உலகில் புகழ்பெற்ற எழுத்தாளராக உள்ளவர் சந்திரா தங்கராஜ். தற்போது இவர் இயக்கத்தில் 'கள்ளன்' என்ற திரைப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக உள்ளது.

    Recommended Video

    Kallan Movie | Vetrimaaran சார்தான் ஆரம்பித்து வைத்தார் | Director Chandra | Filmibeat Tamil

    படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று சர்ச்சையும் சமீபத்தில் ஏற்பட்டது. கள்ளன் திரைப்படத்தில் இயக்குநர் கரு.பழனியப்பன் மிக முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக 'தோழா' படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார்.

    பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் அமீர், 'கற்றது தமிழ்' ராம் இருவரிடமும், மேலும் பல்வேறு படங்களிலும் உதவி இயக்குனராக இருந்தவர். நமது பில்மிபீட் தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டி.

    தமிழ் -தெலுங்கில் தயாராகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... ஜனவரியில் சூட்டிங்! தமிழ் -தெலுங்கில் தயாராகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்... ஜனவரியில் சூட்டிங்!

     பெயரே போராட்டம்

    பெயரே போராட்டம்

    கேள்வி : கள்ளன் திரைப்பட பெயருக்கு சர்ச்சைக்கு வந்ததே?

    பதில் : இத்தனை பெரிய சர்ச்சை வரும்ன்னு நெனைக்கவே இல்ல. இது முழுக்க முழுக்க ஒரு கேங்க்ஸ்டர், ராபரி ஸ்டோரி. இந்த கதைக்கு பொருத்தமான ஒரு டைட்டிலாத்தான் இருந்துது. இந்த படத்துல ஜாதிய பத்தியோ சமுதாயத்த பத்தியோ நான் சொல்லல. ஒரு ஆக்ஷன் மூவிதான். கிராமத்து கதையா ஆரம்பிச்சி கேரளா ஆந்திரா, ஜெயில் னு பல்வேறு இடங்கள் ல ட்ராவல் ஆகும். எந்த இடத்துலயும் ஜாதிய பத்தி குறிப்பிடல. கள்ளனுக்கும் கள்ளருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திருடன்ங்கிற பொருள் படற வார்த்தைய தங்களோட ஜாதி சம்பந்தப்படுத்தியதா தலையில தூக்கி வச்சிக்கிறதெல்லாம் ஏன்னு தான் எனக்கு புரியல. அது தேவையே இல்லாத ஒரு விஷயம். இந்த ஜாதிக்கும் படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு பல பிரஸ்மீட் லயும் தனியா விளக்கம் குடுத்தாச்சு.

     சோளம் வருது

    சோளம் வருது

    கேள்வி : உங்களோட இலக்கிய படைப்புகள் பயணங்கள் பற்றி சொல்லுங்களேன்..

    பதில் : பூனைகள் இல்லாத வீடு-ன்னு ஒரு சிறுகதை தொகுப்பு, அதுக்கு சிறந்த சிறுகதைத்தொகுப்புக்கான விகடன் விருது கிடைச்சது. அப்பறம் காட்டின் பெருங்கனவு, அழகம்மா, மிளகு இப்படி சில படைப்புகள் வெளியிட்டேன். இளம் இலக்கியத்துல சிறப்பா செயல்பட்டதால சுந்தர் ராமசாமி விருது, சிகரம் தொட்ட பெண்கள் போன்ற விருதுகள் ல்லாம் கிடைச்சது. சோளம்-ன்னு படைப்பு நூல் இந்தவருடம் புத்தக கண்காட்சிக்கு வருது.

     ரொம்ப ஹெல்ப் பண்ணாரு முத்துக்குமார்

    ரொம்ப ஹெல்ப் பண்ணாரு முத்துக்குமார்

    கேள்வி : இந்த படத்தோட பாடல் வரிகள், இசை அனுபவம் பற்றி?

    பதில் : நா முத்துக்குமார் , இயக்குனர் ராம் மூலமா எனக்கு பழக்கம். நான் படம் எடுக்கனும்ன்னு அவர் ரொம்பவே விருப்பப்பட்டாரு. தயாரிப்பாளர்கள் கூட அவர் பார்த்து பேசினாரு. இப்போ இந்த படம் பண்ண போறேன்னு சொன்னதும், அவர் பாட்டு எழுத சம்மதிச்சாரு. இதுல மூனு பாட்டு அவர் எழுதிருக்காரு. ரொம்ப பிரமாதமா, சிறப்பா வந்துருக்கு. "கே" தான் இந்த படத்துக்கு இசையமைச்சிருக்காரு. இந்த படத்துக்கு முக்கியமான பார்ட் இசை தான் . ரொம்பவே நல்ல டீம் அமைஞ்சது ரொம்ப சந்தோஷம்.

     எல்லாருக்கும் சந்தேகம்

    எல்லாருக்கும் சந்தேகம்

    கேள்வி : உங்கள் படைப்புக்கு தயாரிப்பாளர் கிடைக்க எவ்வளவு போராட்டம் இருந்துச்சு ?

    பதில் : 2010 லருந்து படம் இயக்க முயற்சி பண்ணி, வேறொரு கதை இயக்குனர், காமெடி , பேமிலி படங்கள்ன்னா பண்ணிடுவாங்க.. இவ்வளவு ஆக்ஷன் படத்த பண்ணுவாங்களான்னு ஒரு கேள்வி இருந்துச்சு. ரொம்ப போராட்டங்களுக்கு பிறகுதான் இப்ப படம் உருவாகி இருக்கு. நிச்சயமா நல்ல படைப்பா பேசக்கூடிய படைப்பா இருக்கும்.என்று மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடன் பல விஷயங்கள் பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சந்திரா தங்கராஜ். மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள முழு வீடியோவை பார்த்தால் நிறைய சுவாரஸ்யங்கள் காத்திருக்கு . பில்மி பீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று முழு விடியோவை காணலாம்

    English summary
    Popular Film Writer & Journalist Chandra Thangaraj Exclusive Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X