அப்பா முஸ்லிம்.. அம்மா இந்து.. 5 குழந்தை பெத்துக்க நினைச்சோம்.. பிரபுதேவாவின் எக்ஸ் மனைவி பேட்டி!
சென்னை: நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத் என்கிற லதா அளித்துள்ள பேட்டியில் தனது கணவர் பிரபுதேவா குறித்தும் தனது 2 மகன்கள் குறித்தும் உயிரிழந்த மகன் குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார். நடன இயக்குநராகவும் நடிகராகவும், இயக்குநராகவும் பன்முகத் தன்மைக் கொண்ட பிரபுதேவா தனது முதல் மனைவியை பிரிந்து நடிகை நயன்தாராவை காதலித்தது பலருக்கும் தெரியும். ஆனால், அது பிரச்னையில் முடிந்த நிலையில், இருவரும் பிரிந்து விட்டனர்.
பிரபுதேவா அடுத்ததாக இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சிங்கிள் மதராக தனது இரு மகன்களையும் ரம்லத் வளர்த்து வரும் விதமும் அப்பா பிரபுதேவாவையும் மகன்கள் போய் சந்திப்பது குறித்தும் ரொம்பவே பக்குவமாக பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சினிமாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்வது, இன்னொரு திருமணம் செய்வது என்பதெல்லாம் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. அன்றாட வாழ்க்கையிலும், பல்வேறு தொழில்களை செய்பவர்களும் இதுபோன்ற குடும்ப சிக்கல்களை எதிர்கொண்டு தான் வருகின்றனர்.
அப்பா முஸ்லிம் அம்மா இந்து: ரம்லத் மற்றும் லதா என உங்களுக்கு 2 பெயர்கள் இருக்கிறதே அதற்கு என்ன காரணம் என கலாட்டா யூடியூப் சேனலில் நடைபெற்ற நேர்காணலில் ரம்லத்திடம் தொகுப்பாளினி கேள்வி எழுப்ப, என்னோட அம்மா சைவப் பிள்ளை, அப்பா முஸ்லிம் அதனால் தான் எனக்கு இரண்டு பெயர்கள். ஆனால், நான் சிறு வயதிலிருந்தே இந்துவாகத்தான் வாழ்ந்து வருகிறேன். இஸ்லாத்தை ஃபாலோ செய்யவில்லை. என்னோட அப்பாவும் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என அழகாக பதில் அளித்துள்ளார்.

5 குழந்தைகளை பெத்துக்க நினைச்சோம்: எனக்கும் என் கணவருக்கும் பிள்ளைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். 5 குழந்தைகள் பெத்துக்க நினைச்சோம். ஆனால், முதல் குழந்தையே சிசரின் என்பதால், மொத்தம் 3 முறை தான் சிசரின் மூலம் குழந்தை பெத்துக்க முடியும் என்பதால், 3 குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொண்டோம். 2வது மகன் உயிரிழந்தது எங்களை ரொம்பவே வாட்டி எடுத்து விட்டது என்று உருக்கமாக பேசினார்.
அடுத்த பிரபுதேவா என் மகன் தான்: மூத்த மகன் பெயர் ரிஷி - சின்னு எனக் கூப்பிடுவோம், இளைய மகன் பெயர் ஆதி தேவா இரண்டு மகன்களையும் வாடி போடின்னு தான் கூப்பிடுவேன். எனக்கு அப்படித்தான் கூப்பிட பிடிக்கும். குழந்தைகள் அப்பாவை சென்று பார்ப்பதை நான் ஒரு போது தடுத்தது கிடையாது. அம்மா டான்ஸ் கத்துக்கணும்னு மூத்த மகன் வந்து கேட்டான். கத்துக்க சொல்லிட்டேன். உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியிலும் பிரபுதேவா உருக்கமாக எனக்கு அடுத்து என் மகன் வந்தால் நல்லா இருக்கும் என்றார். நிச்சயம் என் மகன் தான் அடுத்த பிரபுதேவா என பேசியுள்ளார்.
எப்போதுமே அவர் மட்டும் தான்: பிரபுதேவா அடுத்தடுத்து காதலில் விழுவதுமாக திருமணம் செய்வதுமாக இருந்தாலும், தனது இரு மகன்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டு மகன்களை கல்லூரி வரை படிக்க வைத்து வரும் ரம்லத் என்கிற லதா எப்போதுமே தனக்கு அவர் மட்டும் தான் என்றும் வேறு திருமணம் செய்துக் கொள்வதில் எல்லாம் விருப்பம் இல்லை என்றும் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











