LIK Bayilwan Movie Review : நல்லா தூக்கம் வருது.. எல்ஐகே படம் எப்படி இருக்கு? பயில்வான் விமர்சனம்!
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பேனி'. இந்த படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
"லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்தின் கதை, தொழில்நுட்பமும் மனித உறவுகளும் எப்படி மோதுகிறது என்பதைக் காட்டும் விதமாக அமைந்துள்ளது. பசுமை என்ற இடத்தில் வாழும் சீமான், செல்போன் பயன்படுத்துவதற்கு கடுமையாக எதிர்ப்பவர். எந்த சூழ்நிலையிலும் தனது மகன் போனை பயன்படுத்தக் கூடாது என்று நினைத்து, 'பசுமை' என்ற ஒரு தனி உலகையே உருவாக்கி வைத்திருக்கிறார். இதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறார் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி. இவரின் அம்மா மாளவிகா, கணவரை பிரிந்து, தனது மகளுடன் தனியாக வாழ்கிறார். அவருக்கு உயிரைவிட மேலானதாக செல்போன் இருக்கிறது. அதேபோல், தனது மகளையும் ஃபோன் அடிமையாக வளர்க்கிறார்.

L.I.K" படத்தின் கதை: எஸ்.ஜே. சூர்யா, காதலர்களை இணைக்கும் புதிய ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அந்த ஆப்பின் பெயர் "L.I.K". ஆனால், அதை அவர் தனது சுயநலத்திற்காக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். இந்த ஆப்பிற்கு குரல் கொடுக்க வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ஒரு கட்டத்தில் அவர் கீர்த்தி ஷெட்டியை சந்திக்கிறார், இருவருக்கும் காதல் மலருகிறது.
ஆனால், அந்த "L.I.K" ஆப்பில் வரும் லவ் ஸ்கோரில் நல்ல மார்க் வந்தால் தான் காதலை முடிவு செய்வேன் என்று கீர்த்தி ஷெட்டி சொல்கிறார். ஆனால், அந்த ஆப், இவர்களின் காதலை 'Fail' என்று கூறியதும், கீர்த்தி ஷெட்டி பிரதீப்பை விட்டு பிரிகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிப்பு & தொழில்நுட்பம்: பிரதீப் ரங்கநாதன், தனது முந்தைய படங்களைப் போலவே இந்த படத்திலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அவரின் நடிப்பில் ஒரே மாதிரியான அம்சங்கள் தொடர்ந்து இருப்பது சற்று குறையாக தெரிகிறது. எஸ்.ஜே. சூர்யா, ஒரு அனுபவமுள்ள நடிகராக தனது வலிமை மிரட்டலான வில்லன் என்பதை மீண்டும் நிரூபிக்கிறார். அவருக்கு போட்டியாகவே பிரதீப் ரங்கநாதன் நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
தூக்கம் வருது: கீர்த்தி ஷெட்டி, அழகாகவும், கவர்ச்சியாகவும் நடித்துள்ளார். அவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தான். பல இடங்களில் கதை மெதுவாக சென்றாலும், தனது ஒளிப்பதிவால் படத்தை உயிரோட்டமாக வைத்திருக்கிறார். படம் ஆரம்பத்தில் சற்று மெதுவாக செல்கிறது. இரண்டாம் பாதியில் வேகம் எடுக்கிறது, ஆனால் மீண்டும் அதே இடத்தில் நகர்கிறது. படத்தில் நல்ல கருத்து இருந்தாலும், திரைக்கதையில் இன்னும் சுறுசுறுப்பு இருந்திருக்கலாம். இந்த படத்திற்கு 100க்கு 45மதிப்பெண் என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











