சிவகார்த்திகேயன் கூட கம்பேரிசன்.. செகண்ட் ஹீரோ சான்ஸ்.. எப்படி பார்க்குறீங்க.. பிரசன்னா பளிச்!
சென்னை: நடிகர் பிரசன்னா ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் வி கனெக்ட் நிகழ்ச்சியில், கலந்து கொண்டு மிக நீண்ட பேட்டி அளித்திருந்தார்.
பல சுவாரஸ்ய தகவல்கள், சர்ச்சைகள், சமூக கோபங்கள் என கலந்து கட்டி இருந்த அந்த பேட்டியின் மூன்றாம் பாகம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் கூட உங்களை கம்பேர் பண்ணி போடும் மீமை எப்படி பார்க்குறீங்க, பல படங்களில் செகண்ட் ஹீரோ சான்ஸ் அல்லது, இன்னொரு ஹீரோவுடன் இணைந்து நடிப்பது போன்றே வருவது குறித்து என்ன சொல்றீங்க போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு தனது பாணியில் வழக்கம் போல படு கூலாகவும் பளிச்சென்று ஒளிவு மறைவு ஏதுமின்றி மழுப்பல் இல்லாத பதில்களை பிரசன்னா இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தனக்கு பிடித்த நடிகை யாரென்று கேட்டால், சினேகா என்று சொல்ல மாட்டேன், எப்போதுமே தமன்னா என்று தான் சொல்வேன், அவங்களோட நடிப்பு ரொம்ப பிடிக்கும், ஒரு விருது விழா நிகழ்ச்சியில், விருதை வாங்கிவிட்டு, கீழே இறங்கினேன், அப்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த தமன்னா கையில் அந்த விருதை சினேகா கொடுத்து, நீங்க கொடுங்க, ரொம்ப சந்தோஷம் படுவாரு என சொல்லி கிண்டலடித்த க்யூட் சம்பவங்களையும் நினைவு படுத்தி உள்ளார்.
முழு பேட்டியையும் காண வீடியோ லிங்கை க்ளிக் செய்யுங்க..
இந்த ஆண்டு வெளியான மாஃபியா படத்தில் கலக்கிய நடிகர் பிரசன்னா, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள டி43 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தல தளபதிக்கு வில்லனாக வேண்டும் என்ற இவரது ஆசையும் விரைவில் நிறைவேறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











