Prashanth: பிரசாந்தின் வீழ்ச்சிக்கு அவரோட திருமணம் தான் காரணமா? கொளுத்திப் போட்ட பிரபல இயக்குநர்!

சென்னை: டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் பிரசாந்த் நேற்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார்.

விஜய், அஜித்துக்கே ஒரு காலத்தில் கடும் போட்டியாக இருந்த நடிகர் பிரசாந்த் ஒரு கட்டத்தில் சினிமா ஃபீல்டை விட்டே காணாமல் போய் விட்டார்.

 Prashanth cinema life destroyed due to his marriage issues - Director Praveen Gandhi Interview

அதற்கு காரணம் அவரது கல்யாணம் தான் என நடிகர் பிரசாந்தை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பிரவீன் காந்தி அளித்த பிரத்யேக பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

 Prashanth cinema life destroyed due to his marriage issues - Director Praveen Gandhi Interview

50வது பிறந்தநாள்: 1973ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நடிகரும் இயக்குநருமான தியாகராஜனுக்கு மகனாக பிறந்த பிரசாந்த் தனது 50வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். சினிமாவில் பிரசாந்தை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் பிரவீன் காந்தி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரசாந்தின் வெற்றி, தோல்வி, தோல்விக்கான காரணம், பிரசாந்திடம் இருக்கும் அளவற்ற திறமைகள் என ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

 Prashanth cinema life destroyed due to his marriage issues - Director Praveen Gandhi Interview

ஜோடி பட இயக்குநர்: ரட்சகன் படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குநராக அறிமுகமான பிரவீன் காந்தி நடிகர் பிரசாந்தை வைத்து ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கி மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். ஜோடி படத்தின் ஷூட்டிங் சமயத்தில் திடீரென நள்ளிரவு 12 மணிக்கு மேல் செகண்ட் ஹாஃப் கதை சொல்லுங்க என பிரவீன் காந்தியிடம் கேட்ட பிரசாந்த், இந்த படம் சிறந்த காதல் படங்களில் இடம்பெறும் என்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று அப்போதே கணித்தார். அவருடைய கதை ஞானத்தை பார்த்து மிரண்டே போய் விட்டேன் என்றார்.

 Prashanth cinema life destroyed due to his marriage issues - Director Praveen Gandhi Interview

திருமணத்தால் வந்த வினை: தொழிலதிபரின் மகள் கிரகலக்‌ஷ்மியை 2005ம் ஆண்டு நடிகர் பிரசாந்த் திருமணம் செய்து கொண்டது தான் அவர் வாழ்விலேயே செய்த மிகப்பெரிய தவறு என்றும் திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு, மகனை பிரிந்து தவித்தது. மனைவி உடனான விவாகரத்து வழக்கு என 6 முதல் 8 ஆண்டுகளை அந்த ஒரு பிரச்சனையிலேயே சிக்கிக் கொண்டு நடிகர் பிரசாந்த் தனது சினிமா வாழ்க்கையையே மொத்தமாக தொலைத்து விட்டார் என இயக்குநர் பிரவீன் காந்தி தனது பேட்டியில் பளிச்சென பேசி உள்ளார்.

 Prashanth cinema life destroyed due to his marriage issues - Director Praveen Gandhi Interview

சரமாரி புகார்: நடிகர் பிரசாந்த் வரதட்சனை கொடுமை கொடுத்ததாக விவாகரத்து வழக்கை அவரது முன்னாள் மனைவி கிரகலக்‌ஷ்மி தொடுத்தார். அந்த வழக்கின் போது மனைவி மீது பிரசாந்தும் பிரசாந்த் மீது அவரது மனைவியும் சரமாரியாக புகார் கொடுத்தது அப்போது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விஜய் அஜித்தே ஃபீல் பண்ணுவாங்க: பிரசாந்த் சினிமாவில் தான் சற்றே வீழ்ச்சியை சந்தித்தார் என்றாலும், சொந்த வாழ்க்கையில் திநகரில் பிரசாந்த் டவர்ஸ் என்கிற பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடத்தை கட்டி ஜாய் ஆலுகாஸுக்கே வாடகை விட்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். விஜய் மற்றும் அஜித்தே தங்களுக்கு பிரசாந்த் மாதிரியான ஒரு போட்டியாளர் இல்லையே என ஃபீல் பண்ணுவாங்க என பிரவீன் காந்தி தனது பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X