எம்ஜிஆர் என்கிட்ட இந்த விஷயத்தை தான் சொன்னாரு.. அதுதான் என்னை மாத்திடுச்சு.. பிரசாந்த் அப்பா பளிச்!
சென்னை: நடிகர் பிரசாந்தின் தந்தையும் மூத்த நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யுடன் தனது மகன் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன் என்பது முதல் எம்ஜிஆர் தனக்கு சொன்ன அட்வைஸ் வரை என பல விஷயங்களை பேசியுள்ளார்.
தனது மகன் பிரசாந்தை நடிகராக ஆக்க வேண்டும் என துளியும் தான் நினைக்கவில்லை என்றும் தனது அப்பா ஒரு டாக்டர். அதே போல தனது மகனையும் டாக்டராக்கவே நினைத்தேன். ஆனால், மருத்துவ படிப்புக்கான தேர்வில் இரு முறை அவர் தோல்வியை தழுவிய நிலையில், மருத்துவராக முடியாமல் போனது. அதன் பின்னர் சினிமாவில் உள்ள நண்பர்கள் பலர் அறிவுறுத்தலின் படி பிரசாந்தை ஹீரோவாக்கினேன் என்றார்.

பாகுபலியே காப்பி தான்: பொன்னர் சங்கர் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்ட படம் தான் பாகுபலி. ஆனால், என்னோட பொன்னர் சங்கர் படம் ஓடவில்லை. பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதே போல பொன்னர் சங்கர் படத்தில் மாடு பிடிக்கிற போட்டியும் வைத்திருப்பேன். அதை வைத்து உருவான காந்தாரா திரைப்படம் கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது என அந்த பேட்டியில் தியாகராஜன் பேசியுள்ளார்.
விமர்சனம் வந்தால் பிடிக்காது: ஆரம்பத்தில் என்னுடைய படங்களுக்கு மோசமான விமர்சனங்கள் வந்தாலோ பத்திரிகைகளில் தப்பாக யாராவது எழுதினாலோ கொஞ்சம் கூட பிடிக்காது. உடனடியாக அந்த நபருக்கே போன் போட்டு திட்டிவிடுவேன். ஒரு பத்திரிகை தொடர்ந்து என்னைப் பற்றி தப்புத் தப்பாகவே எழுதி வந்தது. எதுவும் செய்ய முடியவில்லை. ரொம்பவே மனசு கஷ்டமாகிடுச்சு.
எம்ஜிஆர் கொடுத்த அட்வைஸ்: அப்போ எம்ஜிஆரிடம் நல்ல பழக்கம், நேரா அவரிடம் போய் அண்ணே இப்படியெல்லாம் எழுதுறாங்க என முறையிட்டேன். அவர் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டார். சினிமாக்காரங்களை பாசிட்டிவாகவோ நெகட்டிவாகவோ பத்திரிகையாளர்கள் பேசும் வரையிலும், எழுதும் வரையிலும் தான் நாமெல்லாம் லைம் லைட்டில் இருக்கிறோம் என்பது அர்த்தம். உன்னைப் பத்தி எழுதினா அவனுக்கு பொழப்பு ஓடுதுன்னா நீ பெரிய ஸ்டார் தான் கவலைப்படாதே போ என்றார். அந்த அட்வைஸுக்கு பிறகு தான் அந்த விஷயமே புரிந்தது. அதன் பின்னர் என் படங்கள் பற்றியும் என்னை பற்றியும் யார் எப்படி எழுதினாலும் கண்டுக்கவே இல்லை. ஆரம்பத்தில் மகன் பற்றி யாராவது தப்பாக சொன்னால் கோபம் வந்தது. ஆனால், எம்ஜிஆர் சொன்னதையே மீண்டும் நினைத்துக் கொண்டு அமைதியடைந்தேன் என பேசியுள்ளார்.
அந்தகன் பற்றி: அந்தகன் படம் வரவில்லை என்றாலும் அந்த படம் வரவில்லை. அந்த படத்தை அப்பா தியாகராஜன் கெடுத்து விட்டார் என எப்படி எழுதினாலும் அந்தகன் படத்தை ரசிகர்கள் நினைத்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என புரிகிறது. விரைவில் அந்தகன் திரைப்படம் வெளியாகும். நிச்சயம் மீண்டும் என் மகன் பிரசாந்தை அவர்களது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











