திவாகர் ரொம்ப மட்டமான ஆளு.. ச்சீ.. அவன பத்தி பேசக்கூட விரும்பல.. பிரவீன் காந்தி பேட்டி!
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கானா வினோத். மா.கா.பா ஆனந்த், புகழ் அனைவரும் சேர்ந்து தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக திவாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜரான கானா வினோத், மாகாபா, புகழ் ஆகியோர் செட்டில் சில தவறான செயல்களை அவர் செய்ததால், சேனல் நிர்வாகமே அவரை வெளியே அனுப்பியது என்றனர். இந்த பஞ்சாயத்து நாளுக்கு நாள் பெரிதாகி வரும் நிலையில், இதுகுறித்து, பிரவீன் காந்தி பேட்டி அளித்துள்ளார்.
அதில், திவாகர் மாதிரி ஒரு மட்டமான ஒருவரை நான் பார்த்ததே இல்லை. கதையிலும் இப்படிப்பட்ட கேரக்டரை உருவாக்க மாட்டேன். மா கா பா ஆனந்த் மற்றும் கானா வினோத் ஆகியோரை எனக்கு தெரியும். மா கா பா மிகவும் மரியாதையானவர், நல்ல குணம் கொண்டவர். கானா வினோத் கிரியேட்டிவ் அறிவு கொண்டவர். ஆனால் திவாகருக்கு எதுவும் தெரியாது. தயவுசெய்து அவரை யாரும் ஊக்குவிக்க வேண்டாம்.

பிரதீவ் காந்தி: ஜாதி குறித்து பேசுவது, அனைவரையும் மட்டம் தட்டி பேசுவது போன்ற விஷயங்கள் ஏற்க முடியாதது. 'நான் வளர்ந்து விட்டேன்' என்று அவர் கூறுகிறார். ஆனால், அவர் எந்த விதத்தில் வளர்ந்தார் என்பது புரியவில்லை. உண்மையான வளர்ச்சியடைந்த ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற பெரிய நட்சத்திரங்கள் தேவையில்லாமல் பேசாமல் அமைதியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை எல்லாம் பார்த்து விட்டு, இப்படிபட்டவனை பார்க்கும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
திவாகர்: அதேபோல், விஜய் டிவி குறித்து பேசிய பிரவீன் காந்தி, விஜய் டிவி உண்மையில் திறமை இருந்தவர்களை வளர்க்கும். ஆனால், ஒருவர் 'டார்ச்சர்' செய்தால், அவர்களை அப்படியே கழட்டிவிட்டுவிடுவார்கள். திவாகர் விஷயத்திலும் அதுதான் நடந்துள்ளது. திவாகர் எப்போதும் திட்டமிட்டு பிரச்சனையை உருவாக்குகிறார். அவர் செய்வது எல்லாம் காமெடி என்று நினைக்கிறார். ஆனால், மக்கள் அதை ரசிக்கவில்லை தயவு செய்து இதுபோன்ற முட்டாள்களை எல்லாம் வளர்ந்துவிடாதீர்கள் என பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications