ப்ரீத்தி புட்டானி!

By Staff

தென்னிந்திய திரை வானில் தானும் ஒரு ஜிலுஜிலு ஸ்டாராக ஜொலிக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கூறுகிறார், ப்ரீத்தி புட்டானி.

ப்ரீத்தியைப் பார்த்ததுமே மனசுக்குள் சின்னதாக ஒரு பிரளயம் ஏற்பட்டு ஓய்கிறது. அப்படி ஒரு அழகு, அசர வைக்கும் உயரம். பாந்தமாக, சாந்தமாக காணப்படும் அவருக்குள் அப்படி ஒரு நடிப்புப் புயல் வீசிக் கொண்டிருக்கிறதாம்.

அந்தப் புயல்தான் கோலிவுட்டை நோக்கி அவரைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டதாம். சுத்தமாக நடிப்புப் பின்னணியே இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் புட்டானி (அப்பாவுக்கு என்ன பட்டாணி வியாபாரமா?).

நடிப்பார்வம் மட்டும் இருந்தால் போதுமா, அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீச வேண்டாமா?. ப்ரீத்திக்கும் அதே நிலைதான், எல்லாம் எழிலுடன் எடுப்பாக இருந்தும் அவரைப் பார்த்து அதிர்ஷடம் புன்னகைக்காத காரணத்தால் நடிகையாக கடுமையாக போராடினாராம்.

அப்படி, இப்படி தண்டால் எடுத்து ஒரு வழியாக நடிகை ஆனாராம் ப்ரீத்தி. அந்தக் கதையை அவரது வாயாலேயே ப்ரீத்தி சொல்வதைக் கேட்போமே... நாங்கள் ரூடிவாடி சர்தார் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆச்சாரமான குடும்பம் எங்களுடையது. சினிமாவைப் பற்றிப் பேசவே முடியாத குடும்பச் சூழல்.

எனக்கு சொந்த ஊர் பரீதாபாத். டெல்லியில்தான் படித்தேன். எனது அப்பா விமானப்படையில் உள்ளார். அம்மா டீச்சரம்மா. இப்படிப்பட்ட சூழலில் பிறந்த நான் எப்படி நடிகையாவது குறித்துக் கனவு காண முடியும். ஆனாலும் நான் கனவு கண்டேன்.

ஆனால் அது நிஜமாகும் என்று ஒருபோதும் நான் கனவில் கூட நினைத்ததில்லை. இதனால் கனவை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு, மறுபக்கம் காமர்ஸ் படித்தேன், ஏதாவது வேலைக்குப் போகலாம் என்ற எண்ணத்தில்தான்.

ஆனால் அங்குதான் விதி விளையாடியது. எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல், நானும் நடிகையானேனன். அதாவது கல்லூரி நாடகங்களில் நான்தான் ஹீரோயின். அதுதான் எனது முதல் நடிப்புக் களம்.

இங்கு எனக்குக் கிடைத்த பாராட்டும், அங்கீகாரமும் எனது நடிப்பார்வத்தை மேலும், மேலும் தூண்டி விட்டது. விரைவிலேயே கல்லூரிக்குள்ளேயே ஒரு ட்ரூப்பை உருவாக்கினோம். அந்த ட்ரூப் மூலம் பல நாடகங்களைப் போட்டு அசத்தினோம்.

இதன் மூலம் கல்லூரிக்கு வெளியிலும் எனது புகழ் பரவியது. மாடலிங் செய்யும் வாய்ப்புகள் அதிகம் வந்தன. படிப்போடு மாடலிங்கிலும் நான் குதித்தேன். இப்படி ஆரம்பித்தது எனது நடிப்புப் பயணம்.

நடிப்பு ஆர்வம் அதிகமாகவே மும்பைக்கு இடம் பெயர்ந்தேன். அங்கு வேலை பார்த்துக் கொண்டே சினிமாவில் நுழைய முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தில்தான் எனது மும்பை பெயர்ச்சி நடந்தது என்றார் ப்ரீத்தி.

மகளின் நடிப்பார்வத்தைப் பார்த்து பயந்து போன ப்ரீத்தியின் பெற்றோர், சரி நடி என்று பச்சைக் கொடி காட்டினராம். இதையடுத்து சந்தோஷமடைந்த ப்ரீத்திக்கு தனுஜா சந்திராவுடன் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் இரு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்புறம் நடந்ததை ப்ரீத்தியே தொடர்ந்தார் .. தனுஜா சந்திராவுடன் இணைந்து பணியாற்றுவது என்பது, நடிப்புக் கல்லூரியில் படிப்பதற்குச் சமமாகும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அப்போதுதான் எனக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.

அப்படியே கதக் நடனமும் கற்றுக் கொண்டேன். இப்படியாக போய்க் கொண்டிருந்த எனது வாழ்க்கையில் திருப்பமாக, சரத்கபூருடன் இணைந்து ஜானி துஷ்மன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

படத்தில் பெரிய பெரிய கலைஞர்கள் இருந்தும் கூட எனக்குத்தான் நல்ல பெயர் கிடைத்தது. எனக்கு நல்ல வரவேற்பும், கவனிப்பும் கிடைத்தது. இதையடுத்து நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தன

ராஜ்பால் யாதவின் இயக்கத்தில் லேடீஸ் டைலர் படத்திலும் நடித்தேன். இந்தப் படம் எனக்கு நிறைய ரசிகர்களைத் தேடிக் கொடுத்தது. அதற்குப் பிறகு எனது நடிப்புப் பயணம் வேகம் பிடிக்கத் தொடங்கியது என்று நிறுத்தினார் ப்ரீத்தி.

இப்படியாக ஆரம்பித்த ப்ரீத்தி கடைசியில் கோலிவுட்டில் வந்து நின்றார். கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளியான இது காதல் வரும் பருவம் படத்தில் ப்ரீத்தி நடித்தார். இந்தப் படம் பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்களை கஸ்தூரி ராஜாவுக்கு வாங்கிக் கொடுத்தது என்பது நினைவிருக்கலாம்.

படு கிளாமராக இப்படத்தில் நடித்திருந்தார் ப்ரீத்தி. இந்தப் படத்திற்குப் பிறகு ப்ரீத்தி ஹலோ படத்தில் பிரஷாந்த்துடன் இணைந்து நடித்தார்.

மேலும் ஒரு தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் வராததால், அதன் பின்னர் இந்திக்குப் போய் விட்டார்.

இந் நிலையில் மீண்டும் தமிழுக்கு வந்துள்ள ப்ரீத்தி, மருதமலை படத்தில் சரண் ப்ரீத்தி என்ற பெயரில் அர்ஜூடன் இணைந்து நடித்துள்ளார். இதிலும் கிளாமரில் பின்னி எடுத்துள்ளார்.

இதுதவிர கன்னடத்திலும் இரண்டு படங்கள் உள்ளாம். தென்னக மொழிப் படங்களில் அதிகம் நடிக்க ஆர்வமாக உள்ளாராம் ப்ரீத்தி. அதற்காக இந்தியை விட்டு விடும் எண்ணம் இல்லையாம்.

சமீபத்தில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட கிங் நம்பர் 1 என்ற படத்தில் நடித்தாராம். இதுதவிர ஏக்-தி பவர் ஆப் ஒன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் இரு இந்திப் படங்களும் உள்ளனவாம்.

ஆனால் இந்தியை விட தென்னக மொழிப் படங்கள்தான் ப்ரீத்தி கையில் நிறைய இருக்கிறதாம். சரி, பஞ்சாபி உங்கள் தாய் மொழியாச்சே, ஏன் பஞ்சாபியில் நடிக்கலை என்று கேட்டால், பஞ்சாபியில் நடிப்பேன் என்று இதுவரை நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

எனக்கு மொழி முக்கியமல்ல, கலைதான் முக்கியம். இந்தியில் அறிமுகமானேன், இப்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என போய்க் கொண்டிருக்கிறேன் என்றார் ப்ரீத்தி.

சரி இத்தனை கால கலையுலக அனுபவத்தில் ஏதாவது கசமுசா, கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதா என்று ஏதாவது மேட்டரைப் பிடிக்கலாம் என்று கேட்டால், இதுவரை நான் நடித்த படங்களில் நல்ல கலைஞர்களுடன்தான் பணியாற்றியுள்ளேன். நல்லவர்களுடனேயே பழகியுள்ளேன்.

என்னைப் பொருத்தவரை நீங்கள் நல்லவர்களாக இருந்தால் உங்களுக்கு நல்லதே நடக்கும். தவறானவராக இருந்தால் தவறாகத்தான் நடக்கும் என்று தத்துவமாக கக்கி களேபரப்படுத்தினார் ப்ரீத்தி.

பிரமாதம், பிரமாதம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X