Premgi: 9 மணிக்குள் வீட்டுக்கு போகலனா? எல்லாமே மனைவி கண்ட்ரோல் தான்.. பிரேம்ஜி பளீச்!

சென்னை: இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி, அண்ணன் இயக்கிய கோட் படத்தில் விஜய்க்கு மச்சானாக நடித்திருந்தார். அந்த திரைப்படம் மட்டுமில்லாமல், சென்னை 28, சரோஜா, சிலம்பாட்டம், கோவா, மங்காத்த, பிரியாணி, வடகறி, மாநாடு ஆகிய படத்திலும் நடித்துள்ளார். 45 வயது வரை முரட்டு சிங்கிளாகவே சுற்றிக்கொண்டிருந்த பிரேம்ஜி, சேலத்தை சேர்ந்த இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் திருத்தணி கோவிலில் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்து. திருமணத்திற்கு பின், வெளியில் பெரிதாக தலைகாட்டாத பிரேம்ஜி, இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கு அவ்ப்போது தனது மனைவியுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி குறித்து பேசி இருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் என்ற விருது, பிரேம்ஜிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது, தொகுபாளினி கல்யாண வாழ்க்கை எப்படி செல்கிறது என்று கேட்க, அதற்கு பதில் அளித்த பிரேம்ஜி, ஜாலியா அப்படியே போய்க்கொண்டு இருக்கிறது. பிரேம்ஜிஸ் மாமியார் மசாலா என்று ஒரு மசாலா பொடி அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதை என் மாமியாரே தயாரிக்கிறார்கள். தற்போதைக்கு, அந்த மசாலா இன்ஸ்டாகிராமில் தான் விற்கப்படுகிறது. விரைவில் உலக அளவில் அதை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது .

Premgi amaran interview

மனைவியின் கன்ட்ரோல்: தொடர்ந்து பேசிய அவர், கல்யாணத்திற்கு பிறகு நைட் பார்ட்டிகளுக்கு நான் செல்வதில்லை, வீட்டிலேயே அமைதியாக டிவி பார்த்துக் கொண்டு, படம் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியில் செல்வதற்கு அனுமதி இல்லை, சிங்கிளாக இருக்கும்போது நண்பர்களுடன் ஜாலியாக அப்படியே வெளியில் சுத்தலாம். ஆனால், இப்போது திருமணம் ஆகிவிட்டதால், கூடுதல் பொறுப்பு வந்துவிட்டது. அப்போது, எல்லாம் மனைவியின் கண்ட்ரோல் தான். இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்,அவார்ட் வாங்கி விட்டேன். நேராக நான் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். ஆனால், அண்ணன் வெங்கட் பிரபு, சிஎஸ்கே மேட்ச் பார்த்துவிட்டு நைட் பார்ட்டி செல்கிறார். ஆனால் நான் நேராக வீட்டிற்கு தான் செல்ல வேண்டும், நிலைமை அப்படி ஆகிவிட்டது என்றார்.

Premgi amaran interview

மகிழ்ச்சியாக இருக்கிறது: அது தொடர்ந்து பேசிய வெங்கட் பிரபு அவர்கள், பிரேம்ஜி எல்லாவற்றிற்கும் சேர்த்து பல வருடமாக பார்ட்டி செய்து விட்டார். அந்த நேரம் நாங்கள், கொஞ்சம் அமைதியாக இருந்தோம். இப்போது பிரேம்ஜி அமைதியாக இருக்கிறார் நாங்கள் ஜாலியாக பார்ட்டி செய்து கொண்டிருக்கிறோம். திருமணத்திற்கு முன்பு எல்லா இடத்திற்கும் ஒன்றாக தான் செல்வோம். ஆனால், எப்போது நான் தனியாக செல்கிறேன். இருந்தாலும் மன நிறைவாக இருக்கிறது. பல ஆண்டுகளாக திருமணம் செய்து கொள் என்று நாங்கள் அவனை கூறிக் கொண்டே இருந்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டான். பிரேம்ஜியின் மனைவியும் இவரை புரிந்து கொண்டு நல்ல அட்ஜஸ்டபிலாக இருக்கிறார். பிரேம்ஜியை அவர் நல்லாக கவனித்துக் கொள்கிறார். அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று வெங்கட் பிரபு அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X