Prithviraj: என் அப்பா சாவுல கைதட்டி ரசித்து கொண்டு இருந்தார்கள்.. வேதனையைப் பகிர்ந்த பிரித்விராஜ்
சென்னை: மலையாள சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக மட்டும் இல்லாமல் மூத்த நடிகர்களாக இருப்பவர்கள் என்றால், அது மம்முட்டி மற்றும் மோகன் லால் ஆகியோர்தான். இவர்களுக்கு அடுத்த இடத்தில் மலையாளத்தில் பல நடிகர்கள் உள்ளார்கள். இப்படியான நிலையில் இருக்கும் நடிகர்கள் மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பெற்றுள்ளவர்கள், நடிகர், இயக்குநர் பிரித்விராஜ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது தந்தையின் மறைவின் போது நடந்த துயர சம்பவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்விராஜின் முழுப்பெயர் பிரித்விராஜ் சுகுமாரன். இவரது தந்தை சுகுமாரன் மலையாள சினிமாவில் 250 படங்களுக்கு மேல் நடித்த மூத்த நடிகர். இவரது நடிப்பை பாராட்டிய, கேரள அரசு இவருக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கியுள்ளது. தனது தந்தையைப் போலவே சினிமாவில் தனக்கான பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார், பிரித்விராஜ் சுகுமாரன்.
நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குநர், பின்னணி பாடகர் என பிரித்விராஜ் ஜொலித்து வருகிறார். இவரது இயக்கத்தில் வரும் 27ஆம் தேதி எம்புரான் லூசிபர் 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை பிரித்விராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏற்கனவே லுசிஃபர் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியதால், இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் புரோமோசன் பணிகள் சென்று கொண்டுள்ளது.

லுசிபர்: படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கு ஏற்ற வகையில் புரோமோசன் பணிகளை செய்து வருகிறது. மேலும் மலையாள சினிமாவில் ஐமேக்ஸ் திரையரங்கில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் ரிலீஸ் ஆகும் முதல் படலாம எம்புரான் படம் அமைந்துள்ளது. இப்படியான நிலையில் பிரித்விராஜ் அளித்த பேட்டி ஒன்றில், தனது தந்தை மறைவின் போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டு இருந்தார்கள் எனக் கூறியுள்ளார்.

பிரித்விராஜ்: இது தொடர்பாக அவர் பேசும்போது, " என்னைப் பொறுத்தவரை பிரபலங்கள் மறைந்துவிட்டால், அப்போது அங்கு ரசிகர்களை அனுமதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம், எனது அப்பா இறந்துவிட்டார். அவரது உடலை எங்கள் வீட்டில் நாங்கள் வைத்துள்ளோம். பல நடிகர்கள், மலையாள திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் அஞ்சலி செலுத்த வந்து கொண்டு உள்ளார்கள். எங்கள் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போய் உள்ளோம்.

கைதட்டி சிரித்த ரசிகர்கள்: நான் எல்லாம் பெரும் மன வேதனையில் இருக்கிறேன். அப்போது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்த ரசிகர்கள், மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களை பார்த்ததும், ஆரவாரம் செய்து, கைதட்டி விசில் அடித்தார்கள். அந்த ரசிகர்கள் யாருமே எனது மனநிலை குறித்து, எனது குடும்பத்தின் மனநிலை குறித்து எதுவும் யோசிக்கவில்லை" எனக் கூறினார். இவரது இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பிரித்விராஜின் தந்தை சுகுமாரன், கடந்த 1997ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்விராஜ் பகிர்ந்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியும் கவலையும் அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











