பிரியா ஆனந்தை கதறி அழவைத்த புனீத் ராஜ்குமார்... மிகப்பெரிய இழப்பு என கதறல்!

பெங்களூரு : மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமாரின் ஜேம்ஸ் படம் வரும் 17ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் புனீத் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் பிரியா ஆனந்த்.

17ம் தேதி ரிலீசாகும் ஜேம்ஸ்

17ம் தேதி ரிலீசாகும் ஜேம்ஸ்

மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்துள்ள படம் ஜேம்ஸ். இந்தப் படம் வரும் 17ம் தேதி சர்வதேச அளவில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 4000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. புனீத்தின் ரசிகர்கள் இந்தப் படத்தை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பிரியா ஆனந்த் ஜோடி

பிரியா ஆனந்த் ஜோடி

இந்தப் படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் புனீத்திற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர் புனீத்துடன் இணையும் இரண்டாவது படம் இது. மேலும் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உடைந்து அழுத பிரியா ஆனந்த்

உடைந்து அழுத பிரியா ஆனந்த்

படத்தில் புனீத் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். புனீத்தின் ரசிகர்கள் அவரை இறுதியாக திரையில் காண காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிலிமிபீட்டிற்கு அளித்த பேட்டியில் பேசிய பிரியா ஆனந்த், புனீத் குறித்து பேசும்போது உடைந்து அழுதார். அவரால் அவருடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

மிகச்சிறந்த ஹீரோ

மிகச்சிறந்த ஹீரோ

புனீத் ராஜ்குமார் ரீலில் மட்டுமின்றி ரியலாகவும் மிகச்சிறந்த ஹீரோ தான் என்று அவர் பாராட்டு தெரிவித்தார். தான் அவருடன் முதன்முதலில் நடித்தபோது தனக்கு கன்னட வார்த்தைகளை, கோயில்களை மற்றும் உணவுகளை அவர் அறிமுகப்படுத்தியதாகவும் அவ்வளவு பெரிய ஹீரோ இவ்வளவு இயல்பாக, அன்பாக பழகியது தனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்கத்தை ஏற்படுத்திய புனீத்

தாக்கத்தை ஏற்படுத்திய புனீத்

தன்னை சந்திப்பவர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை புனீத் ஏற்படுத்திவிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜேம்ஸ் படத்தில் அவர் தனது ஆதிக்கத்தை மிகப்பெரிய அளவில் செய்துள்ளதாகவும் அனைவரும் விரும்பப்படும் அளவில் இந்தப் படம் கண்டிப்பாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மிகப்பெரிய ட்ரீட்

மிகப்பெரிய ட்ரீட்

அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இந்தப் படம் இருக்கும் என்றும் மற்றவர்களின் பங்களிப்பு இதில் அந்த அளவில் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அவருடன் தான் நடித்துள்ளது குறித்து மிகவும் பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இயல்பான மனிதர்


வெற்றியை தலைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் மற்றவர்களிடம் எப்படி இயல்பாக இருபபது என்பது குறித்து அவரிடம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் சிறப்பான தந்தையாகவும், கணவனாகவும் சிறந்த மகனாகவும் இருந்ததையும் பிரியா ஆனந்த் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதயத்திலிருந்து வெளிவரும் சிரிப்பு

இதயத்திலிருந்து வெளிவரும் சிரிப்பு

எங்கு பார்த்தாலும் அவர் தன்னை பார்த்து சிரிப்பதாக தோன்றுவதாகவும் பிரியா ஆனந்த் தெரிவித்துள்ளார். அவருடைய சிரிப்பு அவருடைய இதயத்திலிருந்து வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒவ்வொரு நிமிடங்களையும் அனுபவித்து வாழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X