வேற மாதிரி இருந்தேன்.. மாஃபியாவுக்கு அப்புறம் நிறைய நட்பு.. பிரியா பவானி சங்கர் ஹேப்பி!

Recommended Video

MAFIA MOVIE PRESS MEET | ARUN VIJAY | PRIYA BHAVANI SHANKAR | FILMIBEAT TAMIL

சென்னை : மாஃபியா படத்திற்கு முன் நான் வேறு மாதிரி இருந்தேன், தற்போது நான் வேறு மாதிரி இருக்கிறேன். ஏனெனில் மாஃபியா படம் மூலம் பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்துள்ளது என பிரியா பவானி சங்கர் கூறியினார்.

நடிகர் அருண்விஜய் நடிப்பில் பிப்ரவரி 21 வெளியாக இருக்கும் படம் தான் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து உள்ளார். படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது. படத்தில் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

 Priya bhavani shankar Interview

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழு பல நேர்காணல்களையும் பல்வேறு பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர். இந்த பேட்டிகளின் போது பிரியா பவானி சங்கர் தனது பட அனுபவத்தை பற்றிய பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

 Priya bhavani shankar Interview

பிரியா பவானி சங்கர் ஒரு இடத்தில் கூறும் போது மாஃபியா படத்திற்கு முன் நான் இருந்தததே வேறு தற்போது நான் வேறு மாதிரி இருக்கிறேன். நிறைய மாற்றங்களை மாஃபியா படம் என்னுள் ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் மூலம் பல நல்ல மனிதர்களின் நட்பு கிடைத்துள்ளது.

மாஃபியா படத்தில் அருண்விஜய் நாயகனாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் தான் இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்துள்ளனர். அருண்விஜய் மற்றும் பிரசன்னா இருவரும் விட்டகொடுக்காத நடிகர்கள் என பிரியா கூறியுள்ளார். இருவரும் சரிசமான நடிப்பை கொடுத்துள்ளனர் என்று கூறினார்.

 Priya bhavani shankar Interview

இந்த படத்தின் இயக்குனருக்கு இது மூன்றாவது படமாகும், ஆனால் முன்னோட்டங்களை பார்க்கும் போது எந்த ஒரு சிறு குறைகளும் இல்லாத அளவில் படத்தை அசத்தலாக எடுத்திருப்பது தெரிகிறது. கார்த்திக் நரேன் பற்றி கூறும் போது ஒரு ஷாட்டை கூட கார்த்திக் நரேன் வீணாக எடுக்கவில்லை எனறார். இதை தான் வேறு ஒரு பேட்டியில் பிரசன்னாவும் கூறியிருத்தார். இந்த மாதிரியான இயக்குனர்கள் தயாரிப்பாளர்களின் பட்ஜெட்களை பல மடங்கு சேமித்து விடுவார்கள்.

 Priya bhavani shankar Interview

அருண்விஜய் பல போராட்டங்களுக்கு பிறகே தற்போது தொடர் வெற்றிகளை சுவைத்து வருகிறார். அருண் விஜய் இத்தகைய வெற்றியை பெருவதற்கு முதல் காரணம் அவரின் பொருமை தான் என்று பிரியா கூறியுள்ளார். இத்தனை வருட கால பொருமை தான் இவரை உயரத்திற்கு ஏற்றியுள்ளது என கூறினார்.

நடிகர் அருண்விஜய் அடுத்ததாக பாக்ஸர் படத்தில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரியா பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஜோடியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X