»   »  பிரியாமணியின் ஏக்கம்!

பிரியாமணியின் ஏக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் தமிழ் தெரிந்த, தமிழ்ப் பெண்களுக்கு நடிக்க வாய்ப்பே தருவதில்லை என்று புலம்புகிறார் முத்தழகு பிரியா மணி.

பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப் பட்டவர் பிரியா மணி. பெங்களூர் தக்காளியான பிரியா, பாரதிராஜாவின் கண்களால் கைது செய் மூலம்நடிகையானவர்.

முதல் படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதித்த பிரியாமணிக்கு தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால்விசனப்பட்டுக் கிடந்த பிரியாவைக் கூப்பிட்டு பாலுமகேந்திரா தனது அது ஒரு கனாக்காலம் படத்தில் நடிக்க வைத்தார். படம் பேசப்பட்டாலும்வழக்கம் போல பிரியாவின் மார்க்கெட் வாடியே கிடந்தது.

இப்போது பருத்தி வீரன் வந்து பிரியாவுக்கு புது வாழ்க்கைக் கொடுத்துள்ளது. ராசியில்லாத நடிகை என்று எந்த வாயெல்லாம் சொல்லியதோஅத்தனை வாயும் இப்போது முத்தழகை புகழ்ந்து தள்ளிக் கொண்டுள்ளன.

பிரியாவும் இந்த வெற்றியால் புளகாங்கிதமடைந்து சந்தோஷ உச்சியில் சதிராடிக் கொண்டிருக்கிறார். அதே நேரம் தன்னை இத்தனை காலம் ஒதுக்கிவைத்து விட்ட தமிழ்த் திரையுலகம் குறித்த ஆதங்கத்தையும் வெளிப்படுத்த அவர் தவறவில்லை.

திரையுலக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில் தனது உள்ளக் குமுறலைக் கொட்டித் தீர்த்து விட்டார். தமிழ்த் தயாரிப்பாளர்கள் தமிழ்ப் பெண்களைமுற்றிலும் நிராகரித்து வருகின்றனர், புறக்கணிக்கின்றனர். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளைத் தர மறுக்கிறார்கள்.

கேரளாவிலிருந்தும், மும்பையிலிருந்தும் குமரிகளைக் கூட்டி வந்து நடிக்க வைக்கின்றனர். இது பெரிய அநீதியாகும்.

நான் ஒரு பச்சைத் தமிழ்ப் பெண். எனது தாய் மொழியில் நடிப்பதையே நான் எப்போதும் விரும்புகிறேன். ஆனால் என்னைப் போன்றதமிழச்சிகளுக்கு இங்கு யார் ஆதரவு தருகிறார்கள்? வாய்ப்பு தருகிறார்கள்?

பாரதிராஜாதான் என்னை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு பாலுமகேந்திரா சார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. படம் நன்றாக இருந்தும், பாராட்டுகிடைத்தும் கூட எனக்கு தொடர்ந்து யாரும் வாய்ப்பு தரவில்லை.

இப்போது அமீர் சார்தான் என்னை அங்கீகரித்து வாய்ப்பு கொடுத்தார். சாதாரண வாய்ப்பா அது.? மிகப் பெரிய கேரக்டரை என்னை நம்பிக்கொடுத்து நடிக்க வைத்தார். அவருக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

பருத்தி வீரன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எனக்கு இப்போது நிறைய தமிழப் பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் ஏற்கனவே சிலதெலுங்குப் படங்களில் புக் ஆகி விட்டேன். இதனால் 2 தமிழ்ப் படங்களை மட்டுமே இப்போது ஏற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

தாய்மொழியைச் சேர்ந்த பெண்களுக்குத்தான் நமது தயாரிப்பாளர்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் சிறப்பாக நடிக்க முடியும்,சரியாக வசனம் பேச முடியும்.

மொழியே தெரியாமல், ஒன்றும் புரியாமல், பிற மொழி நடிகைகளால் எப்படி சிறப்பாக நடிக்க முடியும்? என்று பொறிந்து தள்ளி விட்டார் பிரியாமணி.

பிரியாமணி தெலுங்கில் நடிக்கும்போது கூட அவரேதான் டப்பிங் பேசுகிறாராம், இரவல் குரலைப் பெறுவதில்லையாம்.

எல்லாஞ்சரி, பிரியா மணி மலையாளக் குட்டின்னு ஒரு டாக் உலவுகிறதே, விளக்குவாரா தனது பூர்வீகத்தை பிரியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil