வாய்ப்பு கிடைத்தால் போதும்... எந்த வேடமும் ஓகே! - ப்ரியாமணி

கடைசி அஸ்திரமாக, எந்த வேஷத்துக்கும் தயார்... வாய்ப்பு கொடுங்கள் என்று இறங்கி வந்திருக்கிறார் ப்ரியாமணி.
சமீபத்தில் ஹைதராபாதில் அவர் அளித்துள்ள பேட்டியில், "நடிகையான பிறகு நிபந்தனைகள் விதிப்பது எடுபடாது என்பது புரிந்துவிட்டது. இப்போது நான் எந்த நிபந்தனையும் வுிதிப்பதில்லை. அதே போல எந்த வேடத்தில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். கதை பிடித்து இருந்தால் அதோடு முழுமையாக கலந்து விடுவேன்.
கேரக்டரை எவ்வளவு சிறப்பாக செய்யும் முடியும் என்ற சிந்தனையே எனக்குள் இருக்கும். அதைச் சிறப்பாக செய்ய, கூடிய வரை கஷ்டப்படுகிறேன். விருதுகள் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில்லை.
தனிமை எனக்குப் பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவேன். தனிமையில் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம்...வெறுமையாக வாழ்வதில் இன்பமில்லை. நண்பர்களுடன் சுற்றுவது பார்ட்டிகளுக்கு போவதெல்லாம் எனக்கு பிடித்தமான விஷயங்கள்..." என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











