twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்த நேரத்திலும் பிரச்னைகள் ஏற்படலாம்...இயக்குனர் ப்ரியா சொல்லிய "Gay" சப்ஜெக்ட் ஸ்பெஷல் பேட்டி

    |

    சென்னை: அனந்தம் படத்தில் ஆக்ஷன், காமெடி மட்டுமின்றி, மனிதனின் நவரசங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறேன் என்று இயக்குனர் ப்ரியா கூறினார்கள்.

    Recommended Video

    Director Priya V | என் வீட்டின் கதைதான் Anantham | Filmibeat Tamil

    மேலும் அவர் கூறுகையில், பிரகாஷ்ராஜின் நடிப்பை அப்படியே பிரதிபலித்திருப்பார் நடிகர் அரவிந்த சுந்தர் என்றும் தெரிவித்தார்.

    ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் அனந்தம் திரைப்படத்தின் இயக்குனர் ப்ரியா, நமது பிலீம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    வாரே வா.. கமலின் 'விக்ரம்’ பட டிஜிட்டல் மற்றும் ஒடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போயுள்ளதா?வாரே வா.. கமலின் 'விக்ரம்’ பட டிஜிட்டல் மற்றும் ஒடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போயுள்ளதா?

    14 வருடங்கள் கழித்து...

    14 வருடங்கள் கழித்து...

    கேள்வி: அனந்தம் படம் எதை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?

    பதில்: இந்த அனந்தம் வெப்சீரியஸ், 14 வருடம் கழித்து நான் தமிழில் உருவாக்கியிருக்கும் நான்காவது படைப்பு. இடையில் கன்னடத்தில் ஒரு படம் செய்தேன். உண்மையை கூற வேண்டுமென்றால் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் ஆக்ஷன், காமெடி மட்டுமின்றி, மனிதனின் நவரசங்களையும் இந்த அனந்தம் படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறேன். 9 நவசரங்களை 8 எபிசோடில் காட்டியிருக்கிறேன். நிறைய பிரச்னைகள் குறித்து பேச முயற்சி செய்திருக்கிறேன். அந்த காலத்தில் டி.நகரில் பிராமின் பாஷை பேசறவங்களும், தெலுங்கு மொழி பேசறவங்களும் அதிகமாக இருந்தனர். அனந்தம் வெப்சீரியஸில் வரக்கூடிய பிராமின் பாஷை பேசக்கூடிய குடும்பம் போன்று எனக்கு ஒரு குடும்பம் தெரியும். 8 எபிசோடில் இரண்டு எபிசோடுகள் மட்டும் இப்படியிருக்கும். மற்றவை அனைத்தும் யுனிவர்செல்லாக இருக்கும் என்றார்.

    ஒரு நொடியில் வாழ்க்கை

    ஒரு நொடியில் வாழ்க்கை

    கேள்வி: நடிகர் பிரகாஷ்ராஜ் & இந்திரஜாவை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

    பதில்: அனந்தம் படமானது ஒரு லவ் சப்ஜெக்ட் படம். நான் இயக்கிய கண்ட நாள் முதல் படத்தில் ஆணும், பெண்ணும் காதல் செய்தனர். அனந்தம் படத்தில் ஆணும், ஆணும் காதல் செய்கின்றனர். இந்த உணர்வை வெளியிடுவதற்கு எனக்கு கிடைத்தது தான் இந்த ஒடிடி தளம்.இந்த படத்தில் பல விஷயங்களை நான் பேச முற்படுகிறேன். குறிப்பாக Child abuse, Homosex, Cruciality விசித்திரமான ரொமான்ஸ், ஒரு நொடியில் வாழ்க்கை மாற்றம், இன்ஸ்பிரேஷன்ஸ் போன்ற பல விஷயங்களை காட்டியுள்ளேன். பிரகாஷ் ராஜ் ஒரு நல்ல ஆர்டிஸ்ட், நல்ல நண்பர். பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த இந்திரஜா, ஜீ நிறுவன கௌசிக் மற்றும் முரளி மூலமாக எனக்கு அறிமுகமானார். அவரை பார்த்தவுடனே எனக்குப் பிடித்திருந்தது. பிரகாஷ்ராஜ் மற்றும் இந்திரஜா ஆகியோர் அருமையாக நடித்துள்ளனர். இவர்களின் இளமை காலத்தோற்றத்திற்கு அர்விந்த் சுந்தர் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடித்திருந்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பிரகாஷ்ராஜின் நடிப்பை அப்படியே பிரதிபலித்திருப்பார் நடிகர் அரவிந்த சுந்தர். பிரகாஷ்ராஜ் & இந்திரஜா இரண்டு பேரும் டப்பிங் செய்திருப்பார்கள். அருமையாக வந்துள்ளது என்றார்.

    வித்தியாசமான மனிதர்கள்

    வித்தியாசமான மனிதர்கள்

    கேள்வி: எதனால் நீங்கள் "Gay" சப்ஜெக்ட்டை தேர்ந்தெடுத்தீர்கள்?

    பதில்: "Gay" என்கிற இந்த கான்செப்ட்டை எனது இதயத்தில் இருந்து ரொம்ப மரியாதையாக இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். ஒரு சிலரின் பார்வையில் இது தவறாக தெரியலாம். ஒரு சிலருக்கு இது சரி என்று தோன்றலாம். உலகத்தில் வித்தியாசமான மனிதர்கள் உள்ளனர். ஒரு மனிதனின் வாழ்க்கை கலர், ஜாதி, தாம்பத்ய உறவு, பாலினம் போன்றவற்றை கொண்டு மாறுபடக்கூடாது. எல்லா மனிதருக்கும் பிரச்னைகள் இருக்கிறது. எல்லா மதத்தினருக்கும் பிரச்னைகள் இருக்கிறது. எந்த நேரத்திலும் பிரச்னைகள் ஏற்படலாம். இதை தான் நான் படத்தில் தெளிவாக கூறியிருக்கிறேன்.

    கதவை உடைத்துள்ளேன்

    கதவை உடைத்துள்ளேன்

    கேள்வி: நீங்கள் வாழ்ந்ததில் உங்களுக்கு பிடித்த வீடு எது?

    பதில்: எனக்கு பிடித்தது என்னுடைய குடும்ப வீடான "அனந்தம்" தான். இந்த வீட்டில் தான் எனக்கு கல்யாணம் நடந்தது. இந்த வீடு தான் என்னுடைய அளவுகடந்த மகிழ்ச்சியையும், துன்பத்தையும் பார்த்து உள்ளது. அனந்தம் என்பது என்னோட பிரிக்க முடியாத உறவு. இந்த வீட்டின் சுவர்களை நான் தொடும் போது ஒரு வித உணர்வு ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய காதல் முறிவின்போது நான் அழுததும் இந்த வீட்டில் தான். எனது அம்மா இறந்தபோது, இந்த வீட்டின் தரையில் தான் படுத்து அழுது இருக்கிறேன். எனது அக்காவுக்கு கல்யாணம் ஆனதும், அக்காவிற்கு குழந்தை பிறந்தபோது ஏற்பட்ட சந்தோஷத்தையும் அனுபவித்தது இந்த வீட்டில் தான். நான் எனது வீட்டின் சுவற்றில் சாய்ந்து அழுது இருக்கிறேன். எங்களது வீட்டு மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்து இருக்கிறேன். கோபத்தில் சுவற்றை அடித்துள்ளேன். கதவை உடைத்துள்ளேன்.

    அதனால் தான் இந்த வீட்டில் வெவ்வேறு குடும்பங்கள் இருந்தால் எப்படியிருக்கும் என்ற கோணத்தில் தான் அனந்தம் திரைப்படம் எடுத்துள்ளேன். இது போன்ற சம்பவங்கள் ஒவ்வொருத்தர் வீட்டிலும் நடந்திருக்கும். இல்லையென்றால் அவர்களுக்கு தெரிந்தவர்கள் வீட்டில் நடந்திருக்கும். எனவே அனந்தம் திரைப்படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் இந்த வீட்டுடன் தொடர்பு படுத்தியிருப்பேன். இந்த படத்தில் எனக்கு பிடித்த சீன் என்னவென்றால், சுவற்றில் கை நிற்கும் காட்சி தான்.

    அருமையான பயணம்

    கேள்வி: அனந்தம் படம் மூலமாக நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

    பதில்: இந்த திரைப்படத்தை எங்கள் உயிரை கொடுத்து எடுத்து இருக்கிறோம். இதில் பணியாற்றிய அனைவரும் என்னை விட 20 வயது இளையவர்கள். எனது டீமை சேர்ந்த ரீமா, வருண், தயாரிப்பாளர் முரளி ஆகியோர் மிகவும் கடுமையாக பணிபுரிந்தனர். குறிப்பாக எபிசோடு 3ல் ராக்கெட், காத்தாடி தேவைப்பட்டது. அப்பொழுது ஆர்ட் டைரக்டர் வெளியில் சென்றிருந்தார். அப்பொழுது-தான், எப்பொழுதும் Sound ஐ தவறாக எடுக்கும் இளைஞர்கள் தான், ராக்கெட், காத்தாடி போன்றவற்றை உருவாக்கி கொடுத்தனர். எனக்கு எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து கொடுத்தனர். இந்த திரைப்படத்தில் பணிபுரிந்தது என்பது ஒரு Wonderful Journey ஆக இருந்தது. எல்லோரும் இந்த படத்தை பாராட்டி வருகிறார்கள்.மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/TpvM_1ra-J0 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் இயக்குனர் ப்ரியா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

    English summary
    Problems May come at any time after I gave Gay Script, Director Priya Special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X