Exclusive: கொக்கைன் வழக்கு.. அடுத்து மாட்டப்போவது அந்த இளம் இசையமைப்பாளரா.. உடைத்து பேசிய பிரபலம்!
சென்னை: ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் நடுநடுங்க வைத்திருப்பது கொக்கைன் வழக்குதான். கொக்கைன் போதைப் பொருளை விற்பனை செய்த பிரசாத் மற்றும் கெவின் ஆகியோரை கைது செய்தது மட்டுமல்லாமல் நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவை காவல்துறை தட்டித் தூக்கியுள்ளது. இந்நிலையி இந்த வழக்கில் அடுத்தடுத்து பலர் கைதாவார்கள் என பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு நமது பிலிமி பீட் சேனலுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில், " சினிமாவில் பொதுவாகவே கெட் டூ கெதர் கலாச்சாரம் என்பது இருந்து வருகிறது. ஒரு காலத்தில் உணவு மற்றும் அரைட்டைகளுடன் இருந்த இந்த பார்ட்டிகள் எல்லாம், ஒரு கட்டத்தில் மதுபானங்கள் புழங்கும் பார்ட்டிகளாக மாறியது. கடந்த 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் சினிமாவே மொத்தமாக மாறுகிறது. நடிகர்களின் சம்பளம் அதிகரிக்கிறது. ஒரு கிலோ கொக்கைனின் விலை ரூபாய் 7 கோடிகள் எனக் கூறுகிறார்கள். அப்படி பார்க்கும்போது நடிகர்களுக்கு பணம் ஒரு பொருட்டே கிடையாது.
முதலில் இந்த கலாச்சாரம் பாலிவுட் சினிமாவில் இருந்தது. அதன் பின்னர் இது மலையாள சினிமாவில் இருந்தது. இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் சிக்கியுள்ளார்கள். இந்த கொக்கைன் மாதிரியான போதைப்பொருள் பயன்படுத்தவே நடிகர்கள் தனி பார்ட்டி வைத்துக் கொள்கிறார்கள். இந்த பார்ட்டிகளில் பல நடிகர்களும் நடிகர்களின் மனைவிகளும், இசையமைப்பாளர்களின் மனைவிகளும், நடிகைகளும், இசையமைப்பாளர்களும் கூட கலந்து கொள்கிறார்கள் என கூறுகிறார்கள்.

உச்ச நடிகர்கள்: நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பின்னர், நடிகர் கிருஷ்ணா தலைமறைவாகிறார். சில நாட்கள் இதில் ஏதாவது இன்ஃப்ளுயன்ஸ் செய்து இந்த வழக்கில் இருந்து தப்பிக்க முடியுமா என முயற்சி செய்துள்ளார். எதுவும் முடியாது என்பதால் இறுதியாக காவல்துறையிடம் சரணடைந்துள்ளார். இப்படி இருக்கும்போது அவர் கோட் வேர்ட் பயன்படுத்தி கொக்கைனை வாங்கியதும் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதில் பல உச்ச நடிகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.
படப்பிடிப்புத் தளத்தில் கஞ்சா: இந்த போதைப் பொருட்களை பல நடிகர்கள் பொது இடமான பார்களிலும் பப்களிலுமே பயன்படுத்துகிறார்கள். இது மட்டுமல்லாமல் இவர்கள் தனியாக நடத்திக் கொள்ளும் பார்ட்டிகளில் போதையோடு மட்டும் இல்லாமல் வேறு பல விசயங்களையும் நடத்தி விடுகிறார்கள். இன்றைக்கு சினிமாவுக்குள் வரும் பல நடிகர்களும் இளம் இயக்குநர்களும் பணம், போதை, பெண் போன்றவற்றிக்காகத்தான் வருகிறார்கள். இப்படியானவர்கள் அதிகமாக இருக்கும்போது தமிழ் சினிமா எப்படி நன்றாக இருக்கும். நான் கேள்விப்பட்ட வரையில் இன்றைக்கு பெரிய இயக்குநராக உள்ள பல இயக்குநர்கள் படப்பிடிப்புத் தளத்திலேயே கஞ்சா புகைத்துள்ளார்கள்.
இளம் இசையமைப்பாளர்: இந்நிலையில் கொக்கைன் வழக்கில் இளம் இசையமைப்பாளருக்கும் பெரிய ஸ்டார் நடிகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவில் ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டு இவரிவர்கள் குற்றவாளிகள் எனக் கூறியது போல, இங்கும் சொல்லவேண்டும், உண்மை வெளியே வரவேண்டும். தற்போது இந்த வழக்கு 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை மைய்யமாகக் கொண்டு பலருக்கும் கண்ணி வைப்பது போல போய்க்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் இளம் இசையமைப்பாளர் என அவர் குறிப்பிட்டுள்ளதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











