அரசன் படம் டிராப்பா? சிம்புக்கு பதில் வேறு நடிகரா? தயாரிப்பாளர் சென்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் தான் அரசன். இப்படம் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேசன் ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார். அதாவது, மூன்று படங்களில் நடித்துக் கொடுப்பதாக சொல்லி சில கோடிகளை அட்வான்ஸ் வாங்கிவிட்டு, ஒரு படத்தில் மட்டுமே நடித்துவிட்டு, விலகிக் கொண்டார். 2வது படத்திற்காக சில கோடி செலவு செய்து போட்ட செட் வீணாகிவிட்டது. இதனால், சிம்பு 10 கோடி வரை இழப்பீடு கொடுக்க வேண்டும் என ஐசரி கணேஷ் கேட்கிறார்.

இதற்கு சிம்பு அவ்வளவு என்னால கொடுக்க முடியாது என்று சொல்ல, தற்போது அரசன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, Media Circle பாலாஜி பிரபு பேசி உள்ளார். அதில், சிம்பு நடித்த வெந்துதணிந்ததுகாடு படத்திற்கு பிறகு, ஐசரி கணேஷ் தயாரிப்பில் "கொரோனா குமார்" என்ற படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டிருந்தார். கொரோனா காலத்தை மையமாகக் கொண்ட கதை சிம்புவிற்கு பிடித்து இருந்ததால்,சிம்பு அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து படத்தின் ஆரம்ப வேலைகளும் தொடங்கப்பட்டன.ஆனால், படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே சென்றதால், கொரோனா காலம் முடிந்த பிறகு இந்த கதை மக்களுடன் கனெக்ட் ஆகாது என்று கருதி சிம்பு அந்த திட்டத்திலிருந்து விலகிவிட்டார்.

simbu arasan interview
Photo Credit:

நடிகர் சிம்பு: இதனைத் தொடர்ந்து, ஐசரி கணேஷ் மற்றொரு படத்தில் நடிக்க சிம்புவிடம் கேட்டபோதும், சிம்பு ஒகே சொல்லிவிட்டார். ஆனால், சரியான கதை அமையாததால் தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வந்தது. இதனால் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவானது. இதையடுத்து, ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் சிம்புவிடம் சுமார் 14 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சிம்பு தரப்பு "சரியான கதை மற்றும் திட்டமிடல் இல்லாததால் தொடர்ந்து படம் தாமதமானது.
தயாரிப்பாளர் சிம்புவின் தேதியை வீணாக்கினார்" என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றம், இருவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்குமாறு அறிவுறுத்தியது. ஆனால், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த வழக்கு ஐசரி கணேஷ் திரும்ப பெற்றுக் கொண்டார்.

அரசன் டிராப்பா?: தற்போது, இந்த பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் PEPSI யூனியனில் புகார் கொடுத்ததால், "அரசன்" படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறுத்திவைக்கப் பட்டுள்ளதால், பல வதந்திகளும் பரவி வருகின்றன. குறிப்பாக, சிம்பு இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார், அவருக்கு பதிலாக கருணாஸின் மகன் நடிக்கப்போவதாக செய்தி பரவி வருகிறது. ஆனால், படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதால் படம் டிராப்பாகும் வாய்ப்பே இல்லை என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X