ஜனநாயகன் லீக்.. எடிட்டர் வாக்குமூலம்.. கொதித்தெழுந்த பிரபலம்!
சென்னை: இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெட்டே, மமீதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த ஜன நாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. ஆனால், படத்திற்கு சென்சார் சான்றிதழ் (censor certificate) கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக, திரைப்படத்தின் வெளியீடு திடீரென தாமதமானது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு மற்றும் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில், கடந்த வாரம் ஜன நாயகன் படத்தின் முழு படமும் இணையத்தில் கசிந்தது. இந்த சம்பவம் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படத்தின் வெளியீட்டுக்கு முன்பே முழு காட்சி வெளியாகியது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, படக்குழு சார்பில் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடந்த விசாரணையின் அடிப்படையில் போலீசார் 6 பேரை கைது செய்தனர். இதில், முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

எடிட்டரின் வாக்கு மூலம்: இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், இந்த விவகாரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளார். கைது செய்யப்பட்டு இருக்கும் எடிட்டர், என்னை ஒரே ஒரு காட்சியை எடிட் செய்வதற்காக அழைத்தார்கள். அப்போது ஜன நாயகன் படத்தின் காட்சி துண்டு துண்டாக இருந்தது. அதை நான் டவுன்லோடு செய்து மொத்தமாக இணைந்தேன் என்று வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார். பிரபல எடிட்டர் பிரதீப் மிகப் பெரிய படங்களுக்கு வேலை செய்கிறவர். அவருக்கு பல உதவியாளர்கள் உள்ளனர். ஆனால், தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் ஒரு ஃப்ரீலான்ஸ் எடிட்டராக ஒரே ஒரு காட்சிக்காக மட்டும் அழைக்கப்பட்டவர். பொதுவாக எடிட்டிங் ஸ்டூடியோவில் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையாக இருக்கும், அங்கு வெளிநபர்கள் அனுமதிக்கப்படுவது குறைவு.
பாலாஜி பிரபு கேள்வி: ஒரு ஃப்ரீலான்ஸ் நபர் மட்டும் உள்ளே இருந்தபோது, மற்ற எடிட்டிங் குழு எங்கே இருந்தது? மூன்று மணி நேரம் ஓடும் பெரிய திரைப்பட கோப்புகளை டவுன்லோட் செய்வது சாதாரண விஷயமல்ல. அந்த நேரத்தில் அவர் தனியாக இருந்தாரா? என்பதும் சந்தேகமாக உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு படத்தின் காட்சி எந்த வரிசையில் வர வேண்டும் என்பது இயக்குனருக்கே தெரிந்த விஷயம். அது கைது செய்யப்பட்ட நபருக்கு எப்படி தெரிந்தது? என பல கேள்விகளை தயாரிப்பாளர் பாலாஜி பிரபு எழுப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications