பொள்ளாச்சியில் ஓட்டல் அறையை மூடி.. விடிய விடிய கார்த்திக் செய்த அட்டூழியம்.. பிரபலம் பேட்டி!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகராக உலா வந்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான கார்த்திக், பல வெற்றிப்படங்களில் நடித்து, ரஜினி, கமலுக்கு இணையான நடிகராக வலம் வந்தார். ஆனால், அவர் படப்பிடிப்புக்கு முறையாத வரமாட்டார், பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தரவில்லை என பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டி வரும் நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, கார்த்திக் பொள்ளாச்சியில் செய்த அட்டகாசம் குறித்து பேசி உள்ளார்.
Fine Time Cine யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கார்த்திக் பல திரைப்படங்களில் நடிப்பதற்காக தேதி கொடுப்பார். ஆனால், தேதியை கொடுத்ததோடு சரி, அதன் பிறகு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வரவே மாட்டார். பல இயக்குநர்களும், இதே பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்கள். நல்ல நடிகன் கார்த்திக் நாசமாக போனதற்கு காரணம் அவரிடம் இருந்த தீய பழக்கங்கள் தான் காரணம்.

கார்த்திக் செய்த அட்டகாசம்: தயாரிப்பாளரும் இயக்குனருமான கே.ஆர். நடிகர் கார்த்திக்கை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த படத்தில் படப்பிடிப்பு பொள்ளாச்சிகள் நடைபெறுவதாக இருந்தது. மொத்த யூனிட்டும் பொள்ளாச்சிக்கு சென்று விட்டார்கள், கார்த்திக்கும் பொள்ளாச்சிக்கு வந்து ஹோட்டல் அறைக்கு சென்று விட்டார். அடுத்த நாள் படப்பிடிப்பிற்காக ஒட்டு மொத்த யூனிட்டும் தயாராக இருந்தது. ஆனால், கார்த்தி ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. பலரும் கார்த்திக்கின் ஹோட்டல் அறை கதவை தட்டி தட்டி சோர்ந்து போய்விட்டார். கார்த்திக்கிற்காக காத்திருந்து இரவாகி விட்டது. இதனால், கடுப்பான கே.ஆர். படத்தையே கேன்சல் செய்துவிட்டு, அங்கிருந்து ஒட்டுமொத்த படக்குழுவையும் சென்னைக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
ரூமுக்குள் கார்த்திக்: பொள்ளாச்சியை விட்டு மொத்த படக்குழுவும் கிளம்பியது கார்த்திக்கு தெரியாது, மறுநாள் காலையில் தான் ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து சூட்டிங் எங்கே நடக்கிறது என கேட்டிருக்கிறார். அவர்கள் தான் சூட்டிங் கேன்சல் ஆகிவிட்டது, படக்குழு சென்று விட்டார்கள் என்ற தகவலை சொல்லி இருக்கிறார்கள். அதன் பிறகு கார்த்திக் பிளைட் பிடித்து சென்னைக்கு வந்துள்ளார். ஒரு நாள் முழுக்க கதவை பூட்டிக்கொண்டு கார்த்திக் உள்ளே என்ன செய்தார் என்று யாருக்கும் தெரியாது.
பாவம் தயாரிப்பாளர்: இந்த சம்பவம் போல மேலும் ஒரு இயக்குநர் அவரிடம் சிக்கி இருக்கிறார். அந்த இயக்குநர் கார்த்திக்கை வைத்து கஷ்டப்பட்டு பாதி படத்தை எடுத்துவிட்டார். பாடல் காட்சி எடுக்க பெங்களூருக்கு வருகின்றனர். இதற்காக கார்த்திக்கிற்கு பெங்களூர் பேலஸில் அவருக்கு ரூம் போட்டுகொடுத்து அங்கே சில காட்சிகளை எடுத்து இருக்கிறார்கள். அப்போது, ஃபால்ஸில் குளிப்பது போல ஒரு காட்சி எடுக்க வேண்டி இருந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் சொன்னபோது ஃபால்ஸில் குடித்தால் எனக்கு சளி பிடித்து விடும், ஹாட் வாட்டர் கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார் கார்த்திக். இதைக்கேட்டு அதிர்ச்சியான தயாரிப்பாளர் ஃபால்ஸில் எப்படி ஹாட் வாட்டர் வரும் சார் என கேட்டிருக்கிறார். உடனே சரி நான் நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி தயாரிப்பாளரை அனுப்பி உள்ளார்.
ஹாட் வாட்டர் கேட்டார்: மறுநாள் காலை, கார்த்திக் சொன்னபடி படப்பிடிப்புக்கு செல்லவே இல்லை. ஆனால், ஃபால்ஸ் லொகேஷனில், ஒட்டு மொத்த டீமும் அவருக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். மாலை 4 மணி அளவில் கார்த்திக்கின் மேனேஜர் வந்து, சாருக்கு வயித்து வலி என்று சொல்லியிருக்கிறார். இப்படித்தான் கார்த்திக் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், வயிற்று வலி, தலைவலி, பேதி என பல விஷயங்களை சொல்வார். உண்மையில் கார்த்திக் ஒரு திறமையான நடிகர். ஆனால், அவரின் கெட்ட பழக்க வழக்கங்களால் இப்படி ஆகிவிட்டார் என பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











