விஜய்யை தளபதியாக்கியது யார்? பணத்தாசை தான் காரணம்.. நடிகர்களை விளாசிய பிரபலம்!

சென்னை: பெப்சி தலைவா ஆர்.கே. செல்வமணி அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழ் நடிகர்கள் தமிழ்நாட்டில் படப்பிடிப்பை நடத்தாமல் வெளிமாநிலத்தில் படப்பிடிப்பை நடத்துவதால் தமிழ் தொழிலாளர்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்று மனம் உடைந்து பேசி இருந்தார். இது குறித்து Media Circle யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்துள்ளார்.

அதில், ஆர்.கே. செல்வமணி அளித்த பேட்டியை நானும் பார்த்தேன் அவர் சொல்வது 100% உண்மை. தமிழ் நடிகர்களின் அட்டகாசம் சொல்ல முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது. கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத அட்டகாசங்களை எல்லாம் நடிகர்கள் இப்போது செய்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் உதாரணத்திற்கு ரஜினி, கமல், விஜய், சூர்யா, தனுஷ் இவர்களை ஆரம்ப காலத்தில் தமிழ் தயாரிப்பாளர்கள் வைத்து படம் எடுத்தனர். ஆனால், அவர்கள் வளர வளர தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை. விஜய்க்கு ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காக, ஆர்.பி. சௌவுத்ரி, ஏ.எம்.ரத்தினம் போன்ற தயாரிப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் இன்று கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் என்கிற கன்னட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் நடிக்கிறார்.

Vijay Nayanthara Balaji prabhu

விஜய்யை தளபதியாக்கியது யார்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், இனி சினிமாவில் நடிக்க மாட்டேன். அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்றும் சொல்ல கூடிய நிலையில் தன்னுடைய கடைசி படத்தை, ஒரு தமிழ் தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்க வேண்டும். உங்களை வளர்த்து விட்டது தமிழ் தயாரிப்பாளர் தானே. உங்களை தளபதி ஆக்கியது யார்? தவெக தலைவராக்கியது யார் என்பதை எல்லாம் விஜய் மறந்து, தனது கடைசி படத்தை கன்னட தயாரிப்பாளருக்கு கொடுக்க காரணம் என்ன? தமிழ் தயாரிப்பாளர்கள் கையாலாகாதவர்களாக இருக்கிறார்களா?

நடிகர்களுக்கு பணத்தாசை: அதேபோலத்தான் அஜித் அவர்களும் அமராவதி படத்தில் இருந்து, அவரை தமிழ் தயாரிப்பாளர்கள் வளர்த்துவிட்டார்கள்.இப்போது அவர், அவர்களை மறந்துவிட்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பாளரின் படத்தில் நடித்துள்ளார். அவர்கள் ஏன் தமிழ் தயாரிப்பாளர்களை தேர்வு செய்யவில்லை. அதற்கு ஒரே ஒரு காரணம் தான், அவர்கள் கோடி கோடியாக பணம் கொடுக்கிறார்கள். இதனால், பெரிய பெரிய பண முதலைகள் உங்களுக்கு வேண்டும் என்பதற்காக, யார் உங்களை வளர்த்துவிட்டார்களோ... அவர்களை தள்ளிவிட்டுவிட்டு பண முதலைகள் கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடித்து கொடுக்கிறீர்கள்.

Vijay Nayanthara Balaji prabhu

தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்: இப்படி ஒரு பக்கம் நடிகர்கள் கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தாலும் தொழிலாளர்களின் வயிற்றிலேயே அவர்கள் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இன்றைய கால கட்டத்தில் பெரிய பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்கள் எல்லாமே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஸ்டூடியோவில் தான் படமாக்கப்படுகிறது. தேனியில் ஒரு கிராமத்தின் அமைப்பு எப்படி இருக்குமோ, அதையே அங்கு செட்டு போட்டு எடுக்கிறார்கள். பெரிய நடிகர்களுக்கு பிரைவசி என்பது முக்கியமான ஒன்றுதான், கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதற்காக செட்டு போட்டு எடுக்கிறார்கள். அதற்காக மொத்தமாகவே தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கி போய் ஹைதராபாத்தில் படம் எடுத்தால் அங்கே இருக்கும் தெலுங்கு சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். இதனால் இங்கே இருக்கும் தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்.

அப்போ படத்தை இங்கு ரிலீஸ் பண்ணாதே: தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. அங்கு இருந்து படப்பிடிப்பு காட்சிகள் ஒரு சில இணையத்தில் வெளியாகி வருகின்றன. அங்கு இருக்கும் மக்களும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துத்தான் வீடியோவாக வெளியிடுகிறார்கள். அதற்காக, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பது எப்படி சரியானதாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில், எந்த நடிகரையும் எளிதில் நாம் நெருங்கி விட முடியாது. ரஜினியாக இருந்தாலும், கமலாக இருந்தாலும், அவர்களுக்கு என்று தனி பவுன்சர்களை வைத்திருக்கிறார்கள். இரண்டு படங்களின் நடித்துவிட்டால் பெரிய நடிகராகி விடுகிறார்கள். கவினுக்கு கூட தற்போது பரவுன்சர்கள் இருக்கும் நிலையில், படப்பிடிப்பு இங்கே நடத்தினால் என்ன ஆகிவிடப் போகிறது. சினிமாவின் டாப் நடிகர்களான மம்முட்டி, மோகன் லால்,சிரஞ்ஜீவி,ஷாருக்கான் போன்றவர்கள் அவர்களின் ஊரைவிட்டு இங்கு வந்து நடிக்கிறார்களா அப்படி இருக்கும் போது தமிழ் நடிகர்கள் மட்டும் ஏன் அங்கே போக வேண்டும். அப்படி ஹைதராபாத்தில் படம் எடுத்தால் அந்த படத்தை ஏன் தமிழ் நாட்டில் வெளியிடுகிறீர்கள். அதை அங்கேயே வெளியிடவேண்டியது தானே. அங்கே மட்டும் ரிலீஸ் செய்தால் படம் ஓடாது.

Vijay Nayanthara Balaji prabhu

தனி விமானம்: நடிகர்கள் தயாரிப்பாளரிடம் டிமாண்ட் வைக்க ஆரம்பித்தது, கேரவன் வந்ததிலிருந்து தொடங்கிவிட்டது. அப்போதில் இருந்தே, நடிகர்கள் தனக்கு தனி விமானம் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டார்கள். நயன்தாரா, ஏற்கனவே நான் ஊட்டிக்கு நடிக்க வர மாட்டேன். சென்னையிலேயே ஊட்டி போல செட்டப் போடுங்கள் என்று கேட்டார். இதற்காக, மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் சென்னையில் ஊட்டி போல செட் போடப்பட்டு படம் எடுக்கப்பட்டது. அதேபோல நவரச நாயகன் கார்த்திக், ஃபால்ஸ் காட்சியில் நடிப்பதற்கு சுடு தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். ஃபால்ஸில் வரும் தண்ணீரில் குளித்தால், குளிரும் என்று சுடு தண்ணீர் கேட்டார். அதுபோலவே, இப்போது, பல நடிகைகள் மழை காட்சிகளில் ஆடுவதற்கு சுடுதண்ணீர் தான் தரப்படுகிறது. அது தண்ணீர் இல்ல தயாரிப்பாளரின் கண்ணீர் என்பதை நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நடிகர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து போய்க்கொண்டு தான் இருக்கிறது.

ஒரு லட்சம் சம்பம்: தமிழ் சினிமாவில் உச்சபட்ச நடிகரான சிவாஜி கணேசனின் அதிகபட்ச சம்பளமே ஒரு லட்சம் ரூபாய் தான். அதன் பிறகு, அவருக்கு ஒரு படத்தில் 10 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. பின் படையப்பா படத்தில் சிவாஜி கணேசன் நடித்ததற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார். சிவாஜி கணேசன் கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ஒரே படம் படையப்பா தான். அதுவும் ரஜினி அவர்கள் விருப்பப்பட்டு அந்த சம்பளத்தை கொடுத்தார். அந்த காலத்தில் இருந்த எம்ஜிஆர், ஜெமினி போன்ற நடிகர்கள் எல்லாம் இப்படித்தான் சம்பளம் வாங்கினார்கள். ஆனால், இன்றைய காலத்தில் 200 கோடி, 250கோடி என சம்பளம் வாங்குவதால் அவர்கள் செய்யும் அட்டகாசம் தங்கமுடியவில்லை என்று பாலாஜி பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X