‘தக் லைஃப்‘ தோல்வி சந்தோஷப்பட்டாரா ரஜினி? புலம்பிய த்ரிஷா.. பிரபலம் பேட்டி!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்ததால், படத்தின் அட்வான்ஸ் புக்கிங் சிறப்பாக இருந்தது. ஆனால், படம் வெளியான முதல் நாளில் இருந்தே நெகட்டிவ் விமர்சனம் வந்ததால், அது படத்தின் வசூலை வெகுவாக பாதித்து உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி அளித்துள்ளார்.
அதில், தக் லைஃப் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால். படம் வெளியான போது இப்படி ஒரு படத்தை மணிரத்தினம் எப்படி எடுத்தார். அதில், கமல் எப்படி நடித்தார். திரிஷா ஏன் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் என பலவிதமான விவாதங்கள் சென்று கொண்டே இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் இசை வெளியிட்டு விழாவில் பிரபலமான முத்தமழை பாடல், படத்தில் இல்லவே இல்லை அந்தப் பாடல் நீக்கப்பட்டதா? இல்லை யாராவது சொல்லி அந்த பாடல் நீக்கினார்களா? என பல விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

ரஜினி சந்தோஷப்பட்டார்: 'தக் லைஃப்' படம் தோல்வி என தெரிந்ததும் முதலில் மகிழ்ச்சி அடைந்தவர் ரஜினி தான் என கூறப்படுகிறது. ஏன் என்றால், லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இதைப்பார்த்த ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜை தட்டி தூக்கி விட்டார். தற்போது லோகேஷ், ரஜினி இருவரும் சேர்ந்து கூலி திரைப்படத்தில் இணைந்தனர். பின் கமல், மணிரத்தினத்துடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்தார். படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. படம் வேற மாதிரியாக இருக்கும் என பல விமர்சனங்கள் வந்ததால், ரஜினிகாந்த் மனதில் அடுத்து மணிரத்தினத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். இதற்காக மணிரத்தினத்துடன் பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்ததாக கூட சொல்லப்படுகிறது. ஆனால், 'தக் லைஃப்' திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு அந்த எண்ணத்தை ரஜினிகாந்த் கைவிட்டு உள்ளார். ஜெயிலர் படத்தின் வசூலை விட இந்த படம் வசூலை அள்ளிவிடும் என ரஜினி பயந்தார். முதல் காட்சியை பார்த்துவிட்டு மக்கள் கொடுத்த விமர்சனத்தால், ரஜினி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ரொம்ப கஷ்டம்: தக் லைஃப்' படத்தால், கமல்ஹாசன், திரிஷா, சிம்பு இவர்களின் நிலைமை படு மோசமாகிவிட்டது. இப்போது தான், சிம்பு கம் பேக் கொடுத்து அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து மொத்தமாக காலி செய்து விட்டார் மணிரத்தினம். படம் வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு தான் சிம்பு 'தக் லைஃப்' படத்தை பார்த்து இருக்கிறார். படத்தை பார்த்து உடனே துபாய்க்கு கிளம்பி சென்று விட்டார். அதேபோல, த்ரிஷாவும் இப்பொழுது அடுத்தடுத்து திரைப்படங்களின் முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டு வந்தார். அவரும், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் ஏன் நடித்தோம் என புலம்பிக்கொண்டு இருக்கிறார். 350 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 40 கோடியை தாண்டுவதே மிகவும் கஷ்டம் என அந்த பேட்டியில் பாலாஜி பிரபு பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











