யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. அபிநய் உடம்பில் ஊசி போடாத இடமே இல்லை.. பிரபலம் வேதனை!

சென்னை: தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் அபிநய், உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். 44 வயதான அபிநய். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இவர் இன்று காலை 4 மணியளவில் காலமானார். இதுகுறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசி உள்ளார்.

Media Circle யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் துள்ளுவதோ இளமை. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாகும். பள்ளி மாணவர்களை வைத்து இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் கஸ்தூரி ராஜா. தனுஷ் அறிமுகமான இந்த படத்தில், தனுஷின் நண்பனாக நடித்தவர் தான் அபிநய். இந்த படம் வெளியான போது தனுவை விட பார்ப்பதற்கு அழகாக இருந்தார் அபிநய். ஹீரோ மெட்டீரியலாக இருந்ததால், தனுசை விட அபிநய்க்கு தான் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று அனைவரும் பேசினார்கள்.

abhinay thulluvadho ilamai death balaji prabhu
Photo Credit:

நடிகர் அபிநய்: துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியான பின் பத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் முன் பணம் கொடுத்து அபிநய்யை புக் செய்தார்கள். இதையடுத்து, ஜங்ஷன் படத்தில் நடித்தார் அந்த படம் பெரிய தோல்வி திரைப்படமாக அமைந்ததால், முன்பணம் கொடுத்தவர்கள் எல்லாம், பணத்தை திரும்பி வாங்கிக்கொண்டார்கள். அபிநய்யை ஹீரோவாக வைத்து யாரும் படம் எடுக்க முன்வரவில்லை. இதையடுத்து ஒரு சில திரைப்படங்களில் அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு வாய்ப்பு கதாநாயகனாக வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வாய்ப்பு கிடைக்காததால், ஒரு சில விளம்பரங்களில் நடித்து வாழ்க்கையை ஓட்டினார்.

இன்று உயிரிழந்தார்: அழகு, திறமை என அனைத்தும் இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற வருத்தம் மனதிற்குள் இருந்ததால், வேதனையால், குடிக்கு அடிமையானார். இந்த சூழ்நிலையில் தான் அபிநய்யின் தாயார் 2019 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அபிநய், மேலும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து மோசமான நிலையில் இருந்தார். அவரின் இந்த மோசமான நிலையை பார்த்த தனுஷ், கேபிஓய் பாலா பலரும் உதவி செய்தார்கள். ஆனாலும், இன்று உயிரிழந்துவிட்டார்.

எதிரிக்குகூட இந்த நிலைமை வரக்கூடாது: இரண்டு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில், உடலை அவர் வாடகைக்கு இருந்த வீட்டில் வைக்கக்கூட, வீட்டின் உரிமையாளர் அனுமதிக்கவில்லை. அதன்பிறகு நடிகர் சங்கம் தலையிட்டு தற்போது அவரின் உடல் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடமாகவே அவர் படாதபடு பட்டு இருக்கிறார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தார். அவருக்கு சரியான டோனர் கிடைக்கவில்லை. அவர் உடலில் ஊசி போடாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அந்த நோயால் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். உடன் பிறந்தவர்கள் இல்லை, பெற்றோர் இல்லை, எந்த சொந்தமும் இல்லாமல் இன்று அனாதையாக இறந்து இருக்கிறார். எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த வீடியோவில் உருக்கமாக பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X