தலையே சுத்துது.. சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி கடனா?.. தயாரிப்பாளர் வேதனை
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சேயோன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து இரண்டு படங்களைத் தயாரித்த, கே.ஜே.ஆர் ராஜேஷ் அண்மையில் அளித்த பேட்டியில் மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்ட தகவல் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
இவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதாவது, ஹீரோ என்ற படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான அயலான் படமும் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் இந்த இரண்டு படங்களாலும் தனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பெரிய இழப்பு என்றும் கடன் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடன்: இது தொடர்பாக தயாரிப்பாளர் ராஜேஷ் கூறும் போது, " இந்த இரண்டு படங்களாலும், இதனால் ஏற்பட்ட கடன், அதற்கான வட்டி, இடையில் ஏற்பட்ட கொரோனா கால இடைவெளி என பல காரணங்களால் தற்போது வரை ரூபாய் 120 கோடிகள் கடன் ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல், முதலில் இந்த கடன் ரூபாய் 90 கோடிகளாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது அதன் வட்டியுடன் சேர்த்து ரூபாய் 120 கோடி கடனாக மாறிவிட்டது.
இழப்பு: இந்த இரண்டு படங்களால் சிவகார்த்திகேயனுக்கும் சுமார் ரூபாய் 55 கோடிகள் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி, அவர் எங்களுக்கு இன்னும் இரண்டு படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டும். ஆனால் அது எல்லாம் எப்போது நடக்கும் என்று எங்களுக்கு இப்போது வரை தெரியவில்லை. எல்லாம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி தொடர்பான பேச்சுக்கள் தான் கோலிவுட் வட்டாரத்திலும் இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.

சேயோன்: சிவகார்த்திகேயனுக்கு அயலான் படத்திற்கு பின்னர் வெளியான அமரன் படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதேபோல், அதன் பின்னர் வெளியான மதராஸி மற்றும் பராசக்தி படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அதிலும் குறிப்பாக, மதராஸி படம் விமர்சன ரீதியாக பெரும் அதிருப்தியை தான் ஈட்டியது. இவருக்கு சேயோன் படம் கம் பேக் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications