அசோக் செல்வனுடன் நிறைய ஹீரோயின்ஸ் நடித்துதிருந்தாலும்...நாங்க எப்படினு மக்கள் தான் சொல்லணும்.
சென்னை: சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற திரைபடத்தில் எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு என்கிற வசனம் எனக்கு ரொம்ப பிடித்தது என்று தயாரிப்பாளரும், நடிகையுமான ரியா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எனக்கும், நடிகர் அசோக் உடன் உள்ள கெமிஸ்ட்ரி குறித்து மக்கள் தான் கூற வேண்டும் என்றார்.ஜனவரி 28ஆம் தேதி எந்த போட்டியும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் "சில நேரங்களில் சில மனிதர்கள்" படம் வெளியாகி உள்ளது.
படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர் இந்த படத்தின் தலைப்பு எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவல் அனைத்தும் மக்கள் மனதில் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதனால் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

முதல்படம்
கேள்வி: சில நேரங்களில் சில மனிதர்கள் திரைபடத்தின் கதாநாயகியாகவும், தயாரிப்பாளராகவும் ரியா நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
தயாரிப்பாளராக நல்ல ஸ்கிரிப்ட் முதல்படமாக அமைந்தது எனக்கு மிகவும் சந்தோஷம். நல்ல படம் தயாரித்து இருக்கிறேன். இதில் நூறு சதவீதம் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன். கதாநாயகியாக நடித்ததில் ஒரு சின்ன பயம் இருக்கிறது. ஏனெனில் மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா? பிடிக்குமா? என்ற எண்ணம் தான். சினிமா இன்டஸ்ட்ரியல் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தூண்டுதல் எனக்கு ஏற்பட்டுள்ளது.

கிளிசரின் போடவில்லை
கேள்வி: இத்திரைப்படத்தில் வரும் பாடல்களில் நடிகர் அசோக் உடன் வேற லெவலில் நடித்தீர்கள் என்று கேமராமேன் மகேந்திரன் கூறினார். அதை பற்றி?
படம் முழுவதும் எந்த விதமான மேக்கப் இல்லாமல் நடிக்க வேண்டிய சூழ்நிலை. ஏனெனில் அந்த கேரக்டரின் அமைப்பு. அதனால் பாடல்களில் மட்டும் கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தோம். அதை கேமராமேன் அழகாக காண்பித்து இருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கில் முதல் இரண்டு நாட்கள் கிளிசரின் போடாமல் நடித்தேன். அதற்கு பின்பு எனது கண்களில் கண்ணீர் இல்லை. அதனால் கிளிசரின் போட்டு நடித்தேன்.

ப்ரோமோஷனில் மட்டும் சந்தித்தோம்
கேள்வி: படத்தில் இடம் பெற்றுள்ள நான்கு கேரக்டர்களில் உங்களுக்கு பிடித்தது?
நான்கு கேரக்டருமே எனக்கு பிடித்தது. ஏனெனில் நமக்கு ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டுமே ஒரு படம் பண்ணுவோம். டைரக்டர் விஷால் எங்க நான்கு பேரையும் சந்திக்க விடவில்லை. ப்ரோமோஷனில் மட்டுமே சந்தித்தோம். சில காட்சிகள் ஒருவரை ஒருவர் சந்திப்பது போலே அமைந்து இருந்தாலும் அணைத்து கதாபாத்திரங்களிலும் நடித்த நடிகர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை .

மனிதர்களுக்கான படம்
கேள்வி: இந்த கதையை சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதா?
இல்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தான் நடந்தது. ஆனால் சென்னை மக்களையோ, சென்னையில் எடுக்கப்பட்டது என்று எந்த இடத்திலும் நாங்கள் குறிப்பிடவில்லை. ஏனெனில் இந்த திரைப்படம் மனிதர்களுக்கான படம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் எமோஷனலை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது.

ஓரமாக இடம் கிடைத்தது
கேள்வி: நடிகர் கமலஹாசன், நடிகர் அசோக்செல்வன் குறித்து...
நடிகர் கமலஹாசன் இருந்த மேடையில் எனக்கு ஓரமாக இடம் கிடைத்தது மிகப்பெரிய சந்தோஷம். இது எனக்காக கிடைக்கப்பெற்ற ஆசிர்வாதம் தான். நடிகர் அசோக்செல்வனுடன் இந்த திரைபடத்தில் 2 ஷாட்களில் மட்டுமே இணைந்து நடித்தேன். மற்ற திரைபடங்களில் நடிகர் அசோக் மற்ற நடிகைகளான வாணிபோஜன், ப்ரித்தி, ரித்திகா சிங் ஆகியோருடன் நடித்த கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. என்னுடன் நடித்தது குறித்து மக்கள் தான் கூற வேண்டும் என்றார்.

தனுஷ் பாடிய பாட்டு
கேள்வி: உங்களுக்கு பிடித்த பாடல், வசனம் எது?
பதில் : கவிஞர் சினேகன் வரியில், நடிகர் தனுஷ் பாடிய "யார் விழியில்" என்ற பாடலும், எல்லா பிரச்னைக்கும் ஒரு தீர்வு உண்டு என்ற வசனமும் எனக்கு பிடித்தது என்றார்.மேலும் இந்த வீடியோ பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இணைக்கப்பட்டுள்ன. ஃபிலிமிபீட் தமிழ் யூட்யூப் லிங்க்கை கிளிக் செய்து முழு வீடியோவையும் பார்க்கலாம் .


Click it and Unblock the Notifications











