ரஜினியை ஏன் இழுக்குறீங்க.. ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டார் விஜய்.. கொந்தளித்த தயாரிப்பாளர்

சென்னை: தவெக நடத்திய கண்ட கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ரஜினி குறித்து பேசிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இணையத்தில் இது பெரும் பேசு பொருளாகி இருக்கும் நிலையில், ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிட்டார் விஜய் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினிகாந்த் வர வேண்டும் என நினைத்தார். அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என நினைத்து செயல்பட்டார். ஆனால், இதே திமுக குடும்பம் பல மிரட்டல்களை கொடுத்து அவரை அரசியலுக்கு வராமல் செய்து விட்டது. கடைசியில், ரஜினி ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

Vijay Rajikanth Dhananjayan

பேசியது சரியில்லை: ரஜினியிடம் இல்லாத மனவலிமை, நம் தலைவர் விஜய்யிடம் இருக்கிறது என்று பேசி இருந்தார். இவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களை கோவமடைய செய்தது. சிலர் இணையத்தில் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் அளித்து இருக்கும் பேட்டியில், நடிகர் விஜயின் கட்சி இன்று அபரிமிதமான வளர்ச்சியில் சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா அளவில் விஜயின் வளர்ச்சி அதிகரித்து இருக்கும் நிலையில், கூட இருப்பவர்கள் வளர்ச்சியை இன்னும் அதிகரிக்க தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அதை குறைக்கும் அளவில் யாரும் இருக்கக்கூடாது.

ஓட்டு வாங்குவது கஷ்டம்: தவெக கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா ரஜினியை இழுத்து பேசி இருக்கிறார். திமுகவின் மிரட்டல் காரணமாக தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்ற உண்மைக்கு புறம்பான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். ஆனால், ரஜினிகாந்த் தனது உடல்நலம் குறித்து யோசித்தார், மக்களின் நலனை யோசித்து தான் அரசியலுக்கு வரவில்லை என்றார். அப்படி இருக்கும் போது ஆதவ் அர்ஜூனா இப்படி பேசியது அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இப்படியே சென்று கொண்டு இருந்தால், ரஜினி ரசிகர்களின் ஓட்டை விஜய் பெறமுடியாது என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X