கருப்பு 2 எப்போது? எக்குத்தப்பான வசூலை தொடும்... தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி!
சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'கருப்பு' கடந்த 15ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி, சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. படம் வெளியான ஆறு நாட்களில் 175 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் படம் குறித்து பேசி உள்ளார்.
கருப்பு: சூர்யா அவர்களுக்கு இந்த வெற்றி முக்கியமான மைல்கல்லா பார்க்கப்படுகிறது. 13 வருடங்களுக்கு பிறகு ஹிட் என்று சொல்வது கொஞ்சம் மீடியா ஓவராக எடுத்துக் காட்டுற விஷயம் தான் என்றாலும், கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருந்தும். ஆனால், பெரிய மாஸ் மற்றும் குடும்ப ஆடியன்ஸ் வெற்றி கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. அதைத்தான் இந்த "கருப்பு" படம் மாற்றி இருக்கிறது. ஒரு நடிகரின் மார்க்கெட்டை ஓப்பனிங் கலெக்ஷன் காட்டும். ஒரு படம் முதல் நாளிலேயே 13-14 கோடி ஓப்பனிங் எடுக்கிறது என்றால், மக்கள் இன்னும் அவரை திரையரங்கில் பார்க்க தயாராக இருக்காங்க என்று அர்த்தம்.

நல்ல வசூலை அள்ளும்: சிங்கம் படம் வந்த போது, அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் கதைகள் சூர்யாவுக்கு பெரிய வெற்றியை தந்தது. கருப்பு படம் முதல் 3 நாட்களில் 147 கோடி ரூபாய் வசூலை அள்ளி உள்ளது. இந்த படம் தமிழ்நாட்டை தாண்டி உலகளவிலும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இப்போ தமிழ் சினிமாவுக்கு தியேட்டரில் வெற்றிகள் மிகவும் தேவைப்படும் நேரம். பல படங்கள் 50-60 கோடி சுற்றிதான் முடிகிறது. அந்த சூழலில் 200-300 கோடி கிளப்பில் செல்லக்கூடிய ஒரு படம் வருவது தியேட்டர் வியாபாரத்துக்கும் நல்ல விஷயம். கருப்பு படம் நிச்சயமாக ரூ 300 கோடியை வசூலை தொடும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ100 கோடி வசூலை பெறும் என்றார்.
கருப்பு 2: கருப்பு 2 படம் வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த தனஞ்செயன், இப்போ வரும் அனைத்து படங்களிலுமே இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கிறார்கள், ஒரு வேலை படம் வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் எடுப்பார்கள். அதுப்போலத்தான் இந்த படத்திற்கும் லீட் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது சூர்யாவின் கைவசம் பல படங்கள் இருப்பதால் அடுத்த 2 வருடத்திற்கு அவர் பிஸியாக இருக்கிறார். அது போல ஆர்ஜே பாலாஜியும் பிஸியாக இருக்கிறார். இதனால் உடனே கருப்பு இரண்டாம் பாகம் வருமா என்று சொல்ல முடியாது எல்லாமே ஒரு ஐடியா தான் என தனஞ்செயன் அந்த
பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications