அரசியல் எல்லாம் இல்லை.. பராசக்தி ஜனவரி 10ம் தேதி வெளியாக இதுதான் காரணமாம்.. தயாரிப்பாளர் விளக்கம்!

சென்னை: இயக்குநர் அ. வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால், அடுத்த ஆண்டு தேர்தலை முன்னிட்டு அடுத்த ஆண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்கிற முடிவை விஜய் தான் எடுத்தார் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு சமீபத்தில், வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி கண்காட்சி எல்லாம் திறந்து வைக்கப்பட்ட நிலையில், திமுகவின் தூண்டுதல் காரணமாக ஜனவரி 10ம் தேதி பராசக்தி படம் போட்டியாக வெளியாவதாக ஏகப்பட்ட விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

Producer Dhananjayan reveals there is no Politics in Parasakthi preponed

இந்நிலையில், பராசக்தி திரைப்படம் ஏற்கனவே பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜனவரி 14ம் தேதி படம் வெளியாகாமல், ஜனவரி 10ம் தேதி முன்கூட்டியே படம் வெளியாக இதுதான் காரணம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார்.

நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்?: விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளை சிவகார்த்திகேயன் பிடித்துவிட்டார் என விஜய் பேசி முதல் ஆளாக அவருக்கு தட்டிக் கொடுத்தார். இன்னும் ஏன் அங்க இருக்க நீ தான் நடிக்க வந்துட்டல, இங்கே வா என்றும் சொன்னார். கோட் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கையில் துப்பாக்கியை கிளைமேக்ஸில் விஜய் கொடுத்தது பெரும் பேசு பொருளாக இருந்தது. சிவகார்த்திகேயனும், விஜய் சார் அப்படி பண்ணனும்னு அவசியமே இல்லை. அந்த அளவுக்கு அவருக்கு என்மீது அன்பு என பேட்டிக் கொடுத்திருந்தார். இந்நிலையில், அரசியல் விளையாட்டில் சிவகார்த்திகேயன் சிக்கிக் கொண்டார் என்று சில விஜய் ரசிகர்களும், நன்றி மறந்துவிட்டார் சிவகார்த்திகேயன் என சில விஜய் ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் எஸ்கேவை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Producer Dhananjayan reveals there is no Politics in Parasakthi preponed
Photo Credit:

அரசியல் காரணம் அல்ல: இந்நிலையில், தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஜனவரி 10ம் தேதி பராசக்தி திரைப்படம் வருவதற்கு எந்தவொரு அரசியல் காரணங்களும் இல்லை எனக் கூறியுள்ளார். ஜன நாயகன் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் ஜனவரி 9ம் தேதி வெளியானால், ஒரே வாரத்தில் ஜனவரி 14ம் தேதி பராசக்தி படத்துக்கு தியேட்டர்களை ஒதுக்குவதில் விநியோகஸ்தர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், தான் ஜனவரி 10ம் தேதி பராசக்தி திரைப்படம் வெளியானால், இரண்டு படங்களுக்கும் சமமான தியேட்டர்கள் ஒதுக்கிடப்படும் என தனஞ்செயன் கூறியுள்ளார்.

மக்களை கவரும் படம் ஓடும்: ஜன நாயகன் மற்றும் பராசக்தி என இரு படங்கள் ஒரே நாளில் வந்தால் கூட மக்களை கவரும் படம் தான் கண்டிப்பாக ஓடும் என்கின்றனர். ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் வெளியாகி பாசிட்டிவ் டாக்ஸ் வந்துவிட்டால் பராசக்தி படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்படும் என்றும் ஜன நாயகன் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தால், பராசக்தி படத்துக்கு லாபம் என்றும் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் சரியான டிராமாவை திரைக்கு உள்ளேயும் திரைக்கு வெளியேவும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X