கமல்ஹாசன் பார்ட்டியில் இதெல்லாம் இருக்கும்.. சுசித்ரா சொன்ன மேட்டர்.. பிரபலம் என்ன சொல்றாரு பாருங்க!

சென்னை: கமல்ஹாசன், மணிரத்னம் எல்லாம் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா சமீபத்தில் பகீர் கிளப்பும் பேட்டி ஒன்றை கொடுத்த நிலையில், அதில், ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளிப்படையாக பேசியுள்ளார்.

உலகம் முழுவதும் இந்த டிரக்ஸ் கலாச்சாரம் இருக்கிறது என்றும் சினிமாவில் டிரக்ஸ் யூஸ் பண்ணும் காட்சிகளை சர்வ சாதாரணமாகவோ ஸ்டைலாகவோ காட்டுவது மிகப்பெரிய தவறு என்றும் பேசியுள்ளார் தனஞ்செயன்.

Producer Dhananjayan slams Suchitra for talking baseless things about Kamal Haasan parties

முன்பெல்லாம் எப்படி சிகரெட் பிடிக்கும் காட்சிகளை பார்த்து இளைஞர்கள் அதற்கு அடிமையானார்களோ அதே போல அடுத்து டிரிங்க்ஸ் பண்ணும் காட்சிகளையும் சினிமாவில் நியூ நார்மலாக மாற்றினர். சமீப காலமாக பல படங்களில் போதைப் பொருள் பயன்படுத்துவதை அதிகளவில் காட்டி வந்தால், இளைஞர்கள் அதை பார்த்து கெட்டுப் போகத்தான் செய்வார்கள் எனக் கூறியுள்ளார்.

கமல் பார்ட்டியில் டிரக்ஸ் இருந்ததா?: பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்குப் பிறகு பல முன்னணி நடிகர்கள் குறித்தும் பிரபலங்கள் குறித்தும் தனக்குத் தோன்றியதை எல்லாம் பேசி வருகிறார் என்கிற குற்றச்சாட்டை பலரும் எழுப்பி வந்தாலும், அவரையும் தொடர்ந்து பல மீடியாக்கள் இதுபோன்ற நேரங்களில் பேட்டி எடுத்து வருகின்றன. சமீபத்தில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது செய்யப்பட்ட நிலையில், சுசித்ரா கொடுத்த பேட்டியில், கமல்ஹாசன் பார்ட்டியிலும் மணிரத்னம் வைக்கும் பார்ட்டிகளில் எல்லாம் டிரக்ஸ் தட்டில் வைத்து எடுத்து வருவார்கள். என் முகத்துக்கு கிட்டே வந்தது. ஆனால், நான் அதை எடுத்துக் கொள்ளவில்லை என பகீர் கிளப்பினார். ஆனால், அதெல்லாம் சுத்த பொய் என தனஞ்செயன் கூறியுள்ளார்.

Producer Dhananjayan slams Suchitra for talking baseless things about Kamal Haasan parties

கமல் பார்ட்டியில் இதுதான் இருக்கும்: கமல்ஹாசன் பிறந்தநாள் பார்ட்டி ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெறும். நான் 4 தடவைக்கு மேல் அவரது பார்ட்டிக்கு சென்றிருக்கிறேன். அங்கே வித விதமான உணவுகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் மற்றும் அதிகபட்சமாக மது விருந்து மட்டுமே நடைபெறும். அந்தம்மா சொல்வது போல போதைப் பொருள் எல்லாம் கிடையவே கிடையாது. அவர் முதலில் எந்த பார்ட்டிக்கு போயிருக்கிறார். அவரை யார் அழைத்தார்கள். எப்போது நடந்த்து என எதையுமே தெளிவில்லாமல் பேசி வேண்டுமென்றே மிகப்பெரிய ஆளுமைகள் மீது அபாண்டமாக பழி சுமத்தி வருகிறார் என தனஞ்செயன் வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X