சூர்யா மகர ராசி.. 8 வருஷமா நேரம் சரியில்லை.. லோகேஷ் கனகராஜ் மட்டமான இயக்குநர்.. தயாரிப்பாளர் பேட்டி!

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி தியேட்டரில் வெளியானது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின் வெளியான இந்த படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தின்சூ சூர்யா கேங்ஸ்டராக நடித்து இருப்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் Behind Talkies யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில், சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, கமலுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த வேட்டையாடு விளையாடு போல, சூர்யாவிற்கும் ஒரு படம் அமையும். அந்த நம்பிக்கை சூர்யாவிற்கு உள்ளது, அவர் நம்பிக்கையை விட மாட்டார். ஏதோ ஒரு நல்ல இயக்குநரின் படத்தில் நடித்தால், அந்த வெற்றி சூர்யாவிற்கு நிச்சயம் கிடைக்கும். இப்போது, வெளியாகும் படங்கள் எல்லாமே வன்முறையாகத்தான் வருகிறது. இதனால், பல நடிகர்கள் அதுபோன்ற ரோலில் நடிக்கவே ஆசைப்படுகின்றனர். ஒரு இயக்குநருக்குத்தான் ஒரு ஹீரோ என்ன ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரியும். சூர்யா தேதி கொடுத்துவிட்டார் என்பதற்கான என்ன கதையை வேண்டுமானாலும் எடுப்பது என்பது சரியில்லை.

suriya manickam narayanan

மாணிக்கம் நாராயணன்: சூர்யா ஒரு லவ்வர் பாய், ஒருவன் கதையை சொன்னான் என்பதற்கான கேங்ஸ்டராக நடிப்பது சரியில்லை. அவர் சிங்கம் படத்தில் நடித்திருந்தார், அவருக்கு அந்த போலீஸ் கதாபாத்திரம் சரியாக இருந்தது. அதனால், அதில் நடித்தார் படமும் நன்றாக ஓடியது. இதனால், சூர்யா அவர்கள் தனது உயரத்திற்கும், உடல் வாகுக்கும் ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பது தான் சரியாக இருக்கும். சூரரைப்போற்று படம் ஓடும் என்று நான் நினைக்கவே இல்லை , நல்லவேலை அந்த படம் ஒடிடியில் வெளியானது. அது தியேட்டரில் வெளியாகி இருந்தால் ஒடியே இருக்காது.

நேரம் சரியில்லை : சூர்யாவின் முகம் நல்ல அழகான முகம் அப்படி இருக்கும் போது, அவர் பல பேரை பழிவாங்கும் கேங்ஸ்டராக நடிக்க வைப்பது சரியில்லை. அவர் நல்ல குடும்ப கதை, காதல் கதை இல்லை போலீசாக நடித்தால் நன்றாக இருக்கும். சூர்யா மகர ராசி, அந்த ராசிக்கு கடந்த 7,8 வருடமாகவே நேரம் சரியில்லை. இதுதான் அந்த குடும்பம் குறித்து இணையத்தில் வரும் பல வன்மமான செய்திகளுக்கு காரணம். ஆனால், உண்மையில் சூர்யாவின் குடும்பம் அருமையான குடும்பம், சூர்யா, ஜோதிகா பற்றி பல செய்திகள் வருகிறது. ஆனால், அது எதுவும் உண்மை இல்லை. சூர்யா தனக்கு தகுந்த மாதிரி நல்ல குடும்ப கதையை ஏற்று நடிக்க வேண்டும் இது என் அறிவுரை.

மட்டமான இயக்குநர்: இப்போது இருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், எல்லாத்தையும் வன்முறையாக எடுக்கிறார். என்னை பொருத்தவரை லோகேஷ் கனகராஜ் ஒரு மட்டமான இயக்குநர், அவர் இந்த சமுதாயத்திற்கு கெடுதல் செய்து கொண்டு இருக்கிறார். அப்போதும் ஒருவனை வெட்டுவது, குத்துவது தான் படமா, இப்படி எடுத்தால் படம் எப்படி ஓடும். பணம் இருக்கு என்பதற்கான பணத்தை போட்டு படத்தை எடுத்துவிட்டு, படம் ஓடவில்லை என்றதும் தலையில் துண்டு போட்டுக்கொள்கிறார்கள். இப்படி பணத்தை போட்டு படத்தை எடுத்துவிட்டு லைகா பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. அந்த நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்று யாரும் நினைக்கவே இல்லை. என்னை பொறுத்தவரை பெரிய பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் வாழ வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X