கடவுள்னு ஒருத்தர் இருக்காரு.. கங்குவா ஓடாமல் போக காரணமே இவர் செய்த மோசடியா?.. தயாரிப்பாளர் பகீர்!

சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவ காரணமே அந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பல பைனான்ஸியர்களிடம் செய்யும் மோசடி தான் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் வெளுத்து வாங்கியுள்ளார்.

நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் படங்களை தொடர்ந்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இந்த ஆண்டு ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் வெளியான தங்கலான் மற்றும் கங்குவா படங்கள் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.

kanguva gnanavelraja manickam narayanan

இதற்கெல்லாம் காரணமே பலரது சாபம் தான் என்றும் கடவுள்னு ஒருத்தர் இருக்காரு என மாணிக்கம் நாராயணன் ஒரே போடாக போட்டு பகீர் கிளப்பியுள்ளார். மேலும், சினிமாவில் பலரும் ஏமாற்று பேர்வழிகளாகவே உள்ளனர் என்றும் அதனால் தான் தயாரிப்பு தொழிலையே விட்டுவிட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரித்த படங்கள்: சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தை முதன்முதலாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. ஞானவேல் ராஜா சூர்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் தொடர்ந்து சூர்யாவையும் அவரது தம்பி கார்த்தியையும் வைத்து பல படங்கள் தயாரித்துள்ளார். கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரித்தது. ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த அந்த நிறுவனம் அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, சிங்கம் 3, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, தானா சேர்ந்த கூட்டம், கஜினிகாந்த், நோட்டா, மிஸ்டர் லோக்கல், காட்டேரி, தேள், பத்து தல, 80ஸ் பில்டப், ரெபல், தங்கலான், கங்குவா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளது.

அவரோட படங்கள் எப்படி ஓடும்: பைனான்சியர் ஒருவரிடம் 7 கோடி கடன் வாங்கினா, அந்த கடனை திருப்பித் தராமல் வழக்குப் போட்டு 1 கோடி தான் தரமுடியும் என ஏமாற்றினால், அப்புறம் அவன் படம் எப்படி சார் ஓடும் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தடாலடியாக கேட்டுள்ளார். சமீபத்தில், வெளியான கங்குவா படம் வெளியாவதற்கு முன்பே ஞானவேல் ராஜா மீது ஏகப்பட்ட கடன் வழக்குகள் தான் குவிந்து கிடந்தன என்றும் அவர் கூறியுள்ளார்.

கடவுள்னு ஒருத்தர் இருக்கார்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்த கங்குவா திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிலையில், அடுத்ததாக கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தையும் அந்த நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸ் இன்னமும் சிக்கலை சந்தித்து வருவது போல வா வாத்தியார் படம் வெளியாவதிலும் ஏகப்பட்ட சிக்கல் வரும் என்று கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X