twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இங்க வாங்கி அங்க கொடுத்து... 'சர்வர் சுந்தரம்' படத்துக்கு இதுதாங்க பிரச்னை... தயாரிப்பாளர் விளக்கம்

    By
    |

    Recommended Video

    Server Sundharam Audio Launch | Santhanam | Santhosh Narayanan | Filmibeat Tamil

    சென்னை: சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படத்துக்கு என்னதான் பிரச்னை என்பதை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சொன்னார்.

    சந்தானம் நடித்துள்ள படம், 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். வைபவி சாண்டில்யா ஹீரோயின்.

    பிஜேஷ், கிட்டி, மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளது.

    உணவின் மேன்மை

    உணவின் மேன்மை

    தமிழர்கள் உணவின் மேன்மையை சொல்லும் கதையை கொண்ட இந்தப் படம், உணவே மருந்து என்ற விஷயத்தை மையமாகக் கொண்டது. சென்னையில் ஆரம்பிக்கும் கதை துபாய் வரை சென்று முடிவது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் ஷூட்டிங் நடந்துள்ளது.
    நாகேஷ் நடித்த பழைய 'சர்வர் சுந்தரம்' படத்தின் டைட்டிலை ஏவிஎம் நிறுவனத்தில் அனுமதிப் பெற்று இந்தப் படத்துக்கு வைத்துள்ளனர்.

    சில பிரச்னை

    சில பிரச்னை

    படம் எப்போதோ முடிந்துவிட்டாலும் சில பிரச்னைகளால் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. அதே தேதியில் சந்தானம் நடித்துள்ள டகால்டி படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் சந்தானம் நடித்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதால் பிரச்னை ஏற்பட்டது.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    பின்னர் இரண்டு படத்தின் தயாரிப்பாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், சந்தானத்தின் டகால்டி படம், ரிலீஸ் ஆனது. சர்வர் சுந்தரம் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்று வெளியாகவில்லை. பின்னர் வரும் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அன்றும் படம் வெளியாகவில்லை

    என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனந்த் பால்கி

    ஆனந்த் பால்கி

    இதுபற்றி படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, ரசிகர்களிடம் டிவிட்டரில் மன்னிப்பு கேட்டார். 'படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தவறான அறிவிப்புக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். பிரச்னைகள் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். சிலர் செய்த தவறால் இது நடந்துள்ளது' என்று தெரிவித்திருந்தார்.

    மிராக்கிள் மூவிஸ்

    மிராக்கிள் மூவிஸ்

    இந்நிலையில் படத்துக்கு என்னதான் பிரச்னை என்று தயாரிப்பாளர் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமாரிடம் கேட்டோம். அவர் கூறும்போது, இந்தப் படத்தை, மிராக்கிள் மூவிஸ் என்ற நிறுவனம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்வதற்காக என்னிடம் வாங்கியது. இந்த நிறுவனம் சினிமாவுக்கு புதிது. ஏதோ அரசியல் பின்புலம் இருக்கிறது. படத்தை சரியாக ரிலீஸ் பண்ணுவோம் என்று கூறியிருந்தார்கள்.

    அடமானம்

    அடமானம்

    பின்னர் இந்த நிறுவனத்திடம் இருந்து சிலர், சில ஏரியாவுக்கு வினியோகம் பண்ண வாங்கி இருக்கிறார்கள். வாங்கியவர்கள் அதை வேறு சிலரிடம் அடமானம் வைத்துவிட்டார்கள். இதனால் ஐந்து ஏரியாவில் பிரச்னை. படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தபிறகுதான் இதெல்லாம் வெளியே வந்தது. நான்கு ஏரியா பிரச்னையை முடித்து, ரிலீஸூக்கு ரெடியானால், இன்னொருவர் வந்து நிற்கிறார்.

    சங்கத்தில் புகார்

    சங்கத்தில் புகார்

    அந்த ஒருவருக்கான பிரச்னையை மிராக்கிள் மூவிஸ் நிறுவனம் முடிக்க வேண்டும். அதோடு எனக்கும் அந்த நிறுவனம் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதனால்தான் படம் ரிலீஸ் ஆகவில்லை. இதனால், படத்தின் பிரச்னையை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்திருக்கிறேன் என்றார். இவர் ஏற்கனவே திருடன் போலீஸ், ஒருநாள் கூத்து, புரூஸ்லீ, உள்குத்து ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார்.

    English summary
    Server sundaram Producer selvakumar explains, why this movie release date postponed?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X